Articles Posted by the Author:

 • குக்குறுங்கவிதைக்கதைகள் – 12

  குக்குறுங்கவிதைக்கதைகள் – 12

        ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)     குக்குறுங்கவிதைக்கதை – 1   பாரதி அறங்காவலர்கள்   ………………………………………………………..   ’பாரதியார் பாவி, அவர் இதைத்தான் நினைத்து இப்படி எழுதினார்’, என்றவரும் ’பாரதியார் பாவம், அவர் இதைத்தான் நினைத்து இப்படி எழுதினார்’ என்பவரும் பாரதியின் வாரிசுகள் அல்லவே யல்ல என்று சொல்லாமல் சொல்கிறது இல்லாத அவரின் உயில்.               குக்குறுங்கவிதைக்கதை – 2   அறிவுடைமை […]


 • ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் குக்குறுங்கவிதைக்கதைகள் – 13 – 20

    குக்குறுங்கவிதைக்கதை – 13   பிறழ்மரம்         …………………………………………….. பார்வைக்கு ஆலமரம்தான் என்றாலும் கூர்முள் கிளைகளெங்கும் கீழ்நோக்கித் தொங்கும் விழுதுகளெங்கும் பசிய இலைகளெங்கும் பரவியுள்ள நிழல்திட்டுகளெங்கும் இளைப்பாற இடம் வேண்டுமா முள்பழகிக்கொள் முதலில் என்ற மரத்தை நோக்கி மெல்லச் சிரித்தவாறு கூறியது சிட்டுக்குருவி: ’முதலில் நீ மரத்தின் தன்மையை அறியப் பழகு. நிழல் பூ காய் கனி யென்றாயிரம் மரங்கள் இங்குண்டாமென அறிதலே அழகு’.         குக்குறுங்கவிதைக்கதை – […]


 •  ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      (1) புகைப்படத்தில் உருண்டுகொண்டிருக்கும் கண்ணீர்த்துளி அந்தவொரு புகைப்படத்தில் உருளக் காத்திருக்குமொரு கண்ணீர்த்துளி உண்மையில் பெரிய கதறலாகாது போயிருக்கும் சாத்தியங்களே அதிகம். அது உண்மையான கண்ணீர்த்துளிதானா என்பதே சந்தேகம்….. இரண்டாந்தோலாகிவிட்ட பாவனைகளில் இதுவும் ஒன்றாயிருக்கலாம்; அல்லது இருமியபோது கண்ணில் துளிர்த்திருக்கலாம்; அல்லது கவனமாய் முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சாலையோர கொத்துபராத்தாக் கடையில் காமராக்கள் காணத் தோதாய் நின்றவண்ணம் சற்றுமுன் சாப்பிட்ட கொத்துபராத்தாவின் காரம் காரணமாயிருக்கலாம்; அல்லது நடக்கையில் ஏற்பட்ட சன்ன தூசிப்படலத்தின் ஓர் அணுத்துகள் பறந்துவந்து நாசித்துவாரத்தில் […]


 • ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்   புல்லுருவிகளுக்கும் புல்தடுக்கிகளுக்கும்     ஒரு வார்த்தையை நான் சொன்னதுமே அதன் பொருளை அகராதியில் தேடுகிறாய் பின் அதை நான் பார்த்த விதம் சரியில்லை என்கிறாய் புரிந்துகொண்ட விதம் சரியில்லை என்கிறாய் பயன்படுத்திய விதம் சரியில்லை என்கிறாய். வா, வந்து உட்கார் என்னெதிரே – கற்பிக்கிறேன்’ என்கிறாய் ’வித்தகனாக்குகிறேன் பார் உன்னை வார்த்தை விளையாட்டில்’ என்கிறாய் கல்லைச் சிலையாக்குவதாய் சொல்லைக் கற்றுத்தருகிறேன்’’ என்கிறாய் நில்லாமல் மேற்செல்கிறேன்.   *** *** […]


 • பகடையாட்டம்

  பகடையாட்டம்

        ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)   ஒரு கொலையாளி போராளியாவதும் போராளி கொலையாளியாவதும் அவரவர் கை துருப்புச்சீட்டுகளாய் பகடையாட்டங்கள் _   அரசியல்களத்தில் அறிவுத்தளத்தில் ஆன்மிக வெளியில் அன்றாட வாழ்வில்.   நேற்றுவரை மதிக்கப்பட்ட தலைவர் மண்ணாங்கட்டியாகிவிடுவதும் முந்தாநேற்றுவரை மதிப்பழிக்கப்பட்ட தலைவர் மகோன்னதமாகிவிடுவதும் பிறழா விழிப்பு மனங்களின் மிகு சூட்சுமச் செல்வழியாய்.   மக்கள் மக்கள் என்று மேலோட்டமாய் செய்யப்படும் உச்சாடனங்களில் மன்னர்களே மையக்கருவாய் உட்குறிப்பாய்..   கட்டவிழ்ப்புக்குக் கட்டுப்படாததாய் முழங்கப்படும் கருத்துரிமை பேச்சுரிமை […]


 • கைவசமாகும் எளிய ஞானம்

        ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)   கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி கேட்பவர்களைக் கடந்துசென்றுவிடல் சாலச்சிறந்தது. தர்க்கத்தைக் குதர்க்கமாகத் திரிப்பவர்களுக்கு காதுகளை மூடிக்கொண்டிருந்தால் நம் காலம் விரயமாகாது. Bulk Sulk Hulk என்று ஒரு மொழியிலான இதழில் இன்னொரு மொழியில் கருத்துரைத்தலே தம் அறிவுக்குக் கட்டியங்கூறலாய்க் கொள்வோருக்கு எதிர்க்கருத்துரைக்க மூன்றாவது மொழியைக் கற்றுத்தேர்வதைக் காட்டிலும் முடிக்கவேண்டிய மேலான வேலைகள் மிக அதிகமாக உள்ளன. காலி மூட்டைகளில் கற்களை நிரப்பிகொண்டவாறே போய்க்கொண்டிருக்கும் வேலையற்றவர்களிடம் வீண்பேச்சு எதற்கு? ஒரு பெண் […]


 • ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      காளித்துவம்   கல்லுக்குள் தேரை குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்தபடி அவர்கள் காரசாரமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள்: “குளிரை வெய்யிலென்றும் வெயிலைக் குளிரென்றும் மாற்றிச்சொல்ல யார் அதிகாரம் அளித்தது?” “கடலை அருவியென்றும் அருவியைக் கடலென்றும் மாற்றிச்சொல்ல யார் அதிகாரம் அளித்தது?” குளிருக்கும் வெயிலுக்கும் மூலாதாரமான தட்பவெப்பத்தில் அதன் அடிவேரான அற்புத இயற்கையில் இரண்டறக் கலந்த பின்னே யார் என்பதும் அதிகாரம் என்பதும் குளிரும் வெய்யிலும் பிறவும் இருமையற்றதாக வெறுங்கால் நடைபழகிக்கொண்டிருக்கும் இறை உறை திரு வுளமெலாம் மறைபொருளாகி வலம்வரும் […]


 • மாய யதார்த்தம்

        ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) திடீரென்று ஒரு மாயக் கதவு திறந்துகொண்டதுபோல் தோன்றியது… மாயக்கதவு மனதின் உள்ளும் வெளியும் பப்பாதியாய். மாயம் ஏன் எப்போதும் கதவாகிறது? ஜன்னலாவதில்லை? எத்தனை உயரத்திலிருந்தாலும் மாயஜன்னல்வழியாக வெளியே குதிப்பது கடினமாக இருக்கவியலாதுதானே. மாயஜன்னலிருந்தால் அதன்வழியாக விண்நோக்கிப் பறப்பதும் சாத்தியமே. ஒருவேளை மாயஜன்னல் வழியாய் ஏகமுடிந்த வானத்தில் மேகங்கள் மெய்யாகவே நீரலைகளா யிருக்கக்கூடும் ஆனாலும் மாயம் எப்போதும் கதவாகவே… மாயக்கதவு எப்படியிருக்கும் மாயம் என்றால் என்ன? மன்னிக்கவும் – அகராதிச்சொற்கள் […]


 • ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்   நான் யார் தெரியுமா!?!?   _ என்று கேட்பதாய் சில அமைச்சர்களுடன் தான் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.   _ என்று புரியச்செய்வதாய் மறவாமல் சில முன்னணி நடிக நடிகையர் இயக்குனர் இசையமைப்பாளர்களுடன் புதுப்பட பூஜை நிகழ்வில் பங்கேற்ற செய்திகள் படங்களோடு வெளியாகச் செய்திருக்கிறார்.   _ என்று அடிக்கோடிட்டுக்காட்டுவதாய் சர்வதேச (நாலாந்தர) எழுத்தாளருடன் தோளோடு தோள் சேர்த்து நின்ற, நடந்த காணொளிக் காட்சிகளை வெளியிட்டிருக் கிறார். […]


 • PEEPING TOMகளும்பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்

  இரவுபகலாய் இடையறாப் பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஐந்து நட்சத்திர விடுதிகளின் அகன்ற கூடங்களில் ஒன்றில் ஆரண்யமாய் ஆங்காங்கே ‘பேப்பர் மஷாய்’ மரங்கள் நட்டுக் கட்டமைக்கப்பட்ட அரங்கொன்றில் ஆன்றோரென அறியப்பட்டோர் அவைகளில் அடுக்குமாடிக்கட்டிடத்தின் மொட்டைமாடிப் பந்தலில் இலக்கியப் பெருமான்களுக்கிடையே இணையவழிகளில் _ இன்னும் ஆர்ட்டிக் அண்டார்ட்டிக் துருவப் பிரதேசங்களிலும் புவியின் தென் அரைக்கோளப்பிரதேசங்களின் பெங்குவின்களைப் பார்வையாளர்களாகக் கொண்டும் ‘சீதை இராவணனோடு உறவுகொண்டாளா? கொண்டாள்! கொண்டாளே !! கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது [அது பதிவு செய்யப்பட்ட கைத்தட்டல் என்பது பாவம் நிறைய […]