“ஊசியிலைக்காடுக‌ள்”

Spread the love

இற‌க்கை முளைத்த‌
குண்டூசிக‌ள் எனும்
கொசுக்க‌ளின்
ஊசிக‌ள் அல்ல‌ இவை.

ந‌ம‌க்கு நாமே
ம‌ருத்துவ‌ம் செய்து கொள்ள‌
போட்டுக்கொள்ளும்
ஊசிக‌ளே
இந்த‌க்காட்டின் பூக்க‌ள்.

சங்கரன் கோயில்
==================

தபசுக் காட்சி
சப்பரங்கள் திரும்பிவிட்டன.
சரித்திரங்கள் திரும்பவில்லை.

அம்மா
======

சொல்லி அடித்து
கில்லி ஆடினாலும்
வில்லி இல்லை என்று
சொல்லி விட்டார்கள்.
அலாவுதீன் பூதம்
பெட்டியில் இருக்கிறது.

கலைஞர்
========

சங்கத்தமிழ்
எட்டுத்தொகை யெல்லாம்
துட்டுத்தொகையாய்
தொண்டர்களுக்கு தெரிகிறது.
“கணவாய்”வரலாறுகள்
கவைக்கு உதவாது.
அதனால் வந்த‌
“ச‌ங்க‌ட‌ங்”கோயில் இது.

வைகோ
=======

ஏதாவது
ஒரு நெருப்பு போதும்
என்று
தீக்குச்சிகளையே
நாற்று நட்டுக்கொண்டிருப்பதா?

விஜயகாந்த்
==========

இது வரைக்கும்
அதற்கு ஒரு
“பூந்தோட்டக்காவல் காரனாய்”
இருந்து விட்டு
இன்று தான் தெரிந்ததா
அது சப்பாத்திக்கள்ளி என்று.

காங்கிரஸ்
=========

சூரியனையே புதைத்த
இந்த ஊதுபத்தியா
த‌மிழ்நாட்டுக்கு
வெளிச்ச‌ம் த‌ர‌ப்போகிற‌து?

ர‌ஜ‌னிகாந்த்
==========

இந்த‌ ரோபோக்க‌ள்
இருக்கும் வ‌ரை
இரும்பிலே பூத்த‌
இந்த‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு இனி
ம‌க‌ர‌ந்த‌ங்க‌ளே இல்லை.

பி.ஜே.பி
==========
டெல்லி செங்கொட்டையம்மன்
தேர்திருவிழாவுக்கு
கொடியேற்றியாகி விட்டது.
மன்னார்குடியிலிருந்து
தேரை எப்படிக் கிளப்புவது
“சோ”விலிருந்து
ஈ எறும்பு வரைக்கும்
அது தான் இப்போதைய கவலை.

ம‌ற்ற‌ப‌டி..ம‌ற்ற‌ப‌டி
=================

கூட‌ங்குள‌த்தை
சில்ல‌றையாய் ஆக்கி
மெழுகுவ‌ர்த்திக‌ள்
வாங்கிக்கொள்ளுங்க‌ள்.

செம்மொழியை
அட‌கு வைத்து
கொல‌வெரிக் கூத்து
ஆடுங்க‌ள்.

பால் அட்டைவிலை
ப‌ஸ் க‌ட்ட‌ண‌ம்
அது இது எது என்று…
க்ரூப்புலே டூப் எது?
அந்த‌ முத‌ல்வ‌ர் நாற்காலி எது
என்று….
தேர்த‌லுக்கு தேர்த‌ல்
தேடிக்கொண்டேயிருங்க‌ள்.

டி.வி சீரிய‌ல்க‌ளில்
விள‌ம்ப‌ர‌ தார‌ர்க‌ளின்
சில்ல‌றை சேர்க்கும்
விஷ‌ம‌ங்க‌ளே
அன்றாட‌ விஷுவ‌ல்க‌ள்.
நாட்டில் ந‌ட‌க்கும்
எல்லா “க்ரைம்”க‌ளையும்
ஹிட் ரேட்
எனும்”டெர்ர‌ரிஸ‌”த்தால்
ஒரே குடும்பத்து “சீரியலில்”
அடைத்து
அடைகாத்து
குறி வைப்ப‌தே
அவ‌ர்க‌ள் வீசும் தூண்டில்க‌ள்.

Series Navigationகலாசாரத் தொட்டில்முன்னணியின் பின்னணிகள் – 33