Articles Posted by the Author:

 • போன்ஸாய்

    ருத்ரா மேஜையில்  ஒரு கண்ணாடி குடுவையில் விளையாட்டு போல் ஒரு ஆலங்கன்று நட்டேன். அதற்குள் எப்படி ஒரு முழு வானத்தின் குடை முளைத்தது? சூரியனும் எப்படி அங்கு வெளிச்சத்தேன் பிழிந்தது? அமேசானின் அசுர மழையும் அங்கே அந்த வேர்த்தூவிகளில் எப்படியோ ரத்தம் பாய்ச்சியது. பாருங்கள் என் காகிதமும் பேனாவும் என் கூட வர மாட்டேன் என்கிறது கவிதை எழுத. அந்த அடையாறு ஆலமரமே அந்த கண்ணாடிச் சிமிழுக்குள் கண் சிமிட்டுவதை என் மேஜை உலகமே  வெடிக்கை […]


 • தெளிந்தது

  தெளிந்தது

  ருத்ரா நம் கனவுகள் பூதங்களைப்போல் குமிழிகளை ஊதுகின்றன. எங்கிருந்தாவது  ஒரு முள் வந்து குத்திவிடுமோ என்ற பயம் அந்த குமிழிகளைவிட’ பெரிய குமிழிகளாய் உள் கிடப்பது கலக்கம் ஏற்படுத்துகிறது. ஒரு ரோஜா வானம் விம்ம விம்ம  பெரிதாய் அருகில் வந்தபோது மகிழ்ச்சி ஒரு மாபெரும் கொப்புளம் தான். ஆனால் அதுவும் அடியில் முள் தாங்கி அல்லவா வருகிறது? எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் கவலை வேண்டாம்… என்று ஒரு மகா குமிழி… ஆயிரம் ஆயிரம் பிரபஞ்சங்களை லாலி பாப்புகள் […]


 • லா.ச.ரா.

  ====ருத்ராபேனாவைஅப்படித்தான் சொன்னார்கள்.அடுத்த பக்கம்கண்டுபிடிக்க முடியாத‌குகைவழிப்பாதை என்று. நீண்ட புழுக்கூடு.சிங்குலாரியின் முதல் மைல் கல்கண்ணில் பட்டதும்அப்படித்தான்படக்கென்றுஅடுத்த பிரபஞ்ச வீட்டுவாசலில்கால் வைத்து விடலாமாம். ஐன்ஸ்ட்டின், வீலர், கிப்ஸ் தார்னே,ஸ்டீஃப‌ன்ஹாக்கிங்…பட்டியல் நீளும்.அதிலும்மேக்ஸ் ப்ளாங்க்அந்த‌ “மாறிலி” எனும்சோழியை குலுக்கிதூர‌ உய‌ரே எறிந்து விட்டார். முத‌ல் வெடிப்பின்மூக்குமுனையைக்கூட‌உடைத்துக்கொண்டுஉள்ளேபோய்க்கொண்டிருக்க‌வேண்டிய‌து தான். க‌ணித‌ ச‌ம‌ன்பாடுக‌ளின் சுர‌ங்க‌ம்வ‌ர்க்க‌மும் வ‌ர்க்க‌மூல‌மும்டெல்டாவும் லேம்ப்டாவும்வ‌ழி நெடுக‌ நிர‌டும். க‌ருந்துளைக்கும்உண்டுதொப்பூள் கொடித்துளை. அந்த‌ புழுத்துளைக்குள்போனால்அதி ந‌வீன‌ க‌ணித‌ப்பேராசிரிய‌ர்எட்வ‌ர்டு மிட்ட‌னும்அங்கு தான்ப‌க‌ ப‌க‌ வென‌ சிரிக்கிறார். போக‌ட்டும்விஞ்ஞானிக‌ளின் மூச்சுக‌ளின்விழுதுக‌ளின் ஊஞ்ச‌ல்பிடியைவிட்டுவிட்டால்…“தொபுக் க‌டீர்” தான். இந்த பிரபஞ்ச […]


 • நூலகம்

  நூலகம்

      ருத்ரா (உலக புத்தக தினம்) கணினி யுகம் உன்னை தூசிக்கிடங்கில் தள்ளி விட்டிருக்கலாம். புத்தகக்கண்காட்சிகளில் உன் உயிர் புதுப்பிக்கப்படுகிறது. புத்தகப்பக்கங்களை  தொட்டு மலர்ச்சியுறும்  அந்த விரல்கள்  கைபேசிகளிலேயே முடங்கிப்போய்விடுகிற‌ “பரிணாமத்தின்”ஒரு முடக்குவாதம் எப்படி ஏற்பட்டது? பல்கலைக்கழகங்களையே விழுங்கிப்புடைத்திருக்கும் ஆன் லைன் நூலகங்களால் ஆலமரம் போன்று விழுதூன்றி நிற்கும் மெய்யான நூலகங்கள் நூலாம்படைகளால் நெய்யப்பட்டுக் கிடக்கின்றன. “ஒரு புத்தகத்தை வெளியிட்டுக்காட்டு அப்போது தான் உனக்கு பட்டம்” என்று ஒரு சட்டம் தேவைப்படுகிறது. அப்போது தான் இந்த  […]


 • இன்று…

  இன்று…

      ருத்ரா இன்று நாள் நல்ல நாள். நேற்று அந்த தந்திக்கம்பத்து சிட்டுக்குருவி ஜோஸ்யம் சொல்லிவிட்டது. மனசுக்குள் இந்த இன்பச்சுமையை திணித்து திணித்து சுமையாக்கி சுமப்போம் வாருங்கள். எல்லா நிகழ்வுகளுக்கும் நாம் “சந்தோஷம்” என்றே பெயர் சூட்டுவோம். பாருங்கள் நம் பாரங்கள் இலேசாகி விட்டன. இன்றுகளின்  முகமூடிகள் தான் நேற்றுகளும் நாளைகளும்! இப்போது அந்த சுட்டெரிக்கும் கண்ணீர்த்துளிகள்  கூட‌ நம் முகத்தின் எதிரே படலம் காட்டும் மனத்திரையில் நிறப்பிரிகை செய்து காட்டுகிறது. புற ஊதாக்கதிர்களும் அகச்சிவப்புக்கிரணங்களும் […]


 • ஓலைத்துடிப்புகள் 

  ஓலைத்துடிப்புகள் 

    ===========================================ருத்ரா ஐங்குறுநூறு பாடல்களில் “புளிங்காய் தின்னும்” தலைவியின் காதலும் மசக்கையும் கலந்த ஒரு துயர நிலையைபற்றி “ஓரம்போகியார்” எனும் மா கவிஞர் அற்புதமாக பாடியிருக்கிறார் (பாடல் 51). ஒரு நாள் நள்ளிரவில் அந்தப்பாடலை நான் படித்தபோது புலவரின் தமிழ்நுட்பம் கண்டு பெருவியப்புற்றேன். அவர் வரிகள் எனக்குள்ளேயே கவிதை எழுதும் தினவை அந்த புளிங்காய்ச்சுவை ஏற்றி படாத பாடு படுத்தியது.அதன் விளவே இந்த “உன் உரு தின்னும்..”நான் எழுதிய சங்கநடைச்செய்யுள் கவிதை.________________________________________________________________ருத்ரா என் உரு தின்னும்…=========================================ருத்ரா புளிங்காய் தின்னும் […]


 • ஜென்

  ஜென்

  ============================ இப்படி கேள்வி கேடபதே ஜென். கேள்வியே இல்லாத போது கேள்வியைத் தேடும் பதில் ஜென். கடவுள் பற்றி தியானம் செய்யும் வகுப்பில் முதலில் உட்கார்வது கடவுள். வகுப்பை துவக்குவது ஜென். பிற‌ந்து தான் வாழ்க்கையை ப‌டிக்க‌ வேண்டும். இற‌ந்து தான் வாழ்க்கைக்கு கோடைவிடுமுறை. அடுத்த‌வ‌குப்பு துவ‌ங்கும்போது புத்த‌க‌மும் புதிது. மாண‌வ‌னும் புதிது. ஆசிரிய‌ர் ம‌ட்டும் அதே ஜென். ஜென் ஒரு புதிர். ஜென்னை அவிழ்ப்ப‌தும் இன்னொரு புதிர். ம‌று ஜென்ம‌ம் உண்டு. அதுவும் இந்த‌ ஜென்ம‌த்தில் […]


 • மகுடம்

  மகுடம்

    ருத்ரா எழுபத்தைந்து ஆண்டுகளின்கனமான சுதந்திரம்இதோநம் ஒவ்வொருவரின் தலையிலும்சுடர்கிறதுமணிமகுடமாய்!வரலாற்றின் தியாகத் தருணங்கள்நம் முன்னே நிழலாடுகின்றன.தூக்குக்கயிறுகள்துப்பாக்கி குண்டுகள்அதிரடியான பீரங்கிகள்இவற்றில்மடிந்த இந்திய புத்திரர்கள்வெறும் குப்பைகளா?மியூசியங்களில் அவர்கள்உறைந்து கிடந்த போதும்அவர்களின் கனவுகள் இன்னும்கொழுந்து விட்டு எரிகின்றன‌ஆம்இன்னும் நமக்கு வெளிச்சம்தருவதற்குத்தான்!ஆனால்ஓ! இந்திய மண்ணின் வேர்த்தூவிகளேஇன்னுமாநீங்கள் இருட்டில் கிடக்கவேண்டும்?சாதி மத வர்ணங்கள்எத்தனை தூரிகைகள் கொண்டுதீட்ட வந்த போதும்ஓவியத்தின் வரி வடிவம்விடியல் கீற்றுகளையேநம் கண்ணில் இன்னும் காட்டவில்லையே!இப்போது அந்த மகுடத்தின்கனம் தெரிகிறதா?அவை மயிற்பீலிகள் அல்ல‌அவற்றுள் மறைந்திருப்பதுபுயற்பீலிகள்!உங்கள் சுவாசமாகிப்போன‌அந்த பெருமூச்சுகளில்நம் மூவர்ணம் படபடத்துப்பறப்பதுஉங்களுக்குத் தெரிகிறதா?“ஜெய்ஹிந்த்!” _________________________________


 • வெண்பூப் பகரும் -சங்கநடைச்செய்யுட் கவிதை

  வெண்பூப் பகரும் -சங்கநடைச்செய்யுட் கவிதை

    ருத்ரா இ பரமசிவன் பொருநை யாற்று பொறியறை தோறும்பொருது இனிது வழியும் பொங்குளைப்புனலில்கால் அளை போழ்தின் நுண்வெளி நுடங்கிஅவன் வரும் யாறு அகந்தனில் பெருகிஓங்குதிரை வாங்கும் ஒள்வெண் தண்மதிகடற் கண்டாங்கு ஆர்த்தொலி கலிமான்அலரி வேழப் பூஒலி எதிர்க்கும்.தும்பி நுண்குழல் ஊச்சும் நறவில்சிறைப்படுதலால் “சிறை”யெனப்பட்டாய்ஆம்பல் பிணித்த அஞ்சிறைதும்பி.பகர்ந்தது அறிந்து கடல்நிறை களிக்கும்.பகராமை அஃதொன்றும் உளம் பறி செய்யும்.பகன்றை ஆயினும் இன்மை ஆயினும்பரி இமிழ் அரற்றும் குருகின் அன்ன‌புரி இதழ் அவிழ்தரும் புன்கண் பெருக்கும்புல்லிய அவிநீர் ஆவி உகுக்கும்.அவன்குரல் […]


 • பரிணாமம்

  பரிணாமம்

    ருத்ரா இ பரமசிவன். கல் மண் கரடுபுல் பூண்டுபுழு பூச்சிபுலி சிங்கம் யானைகரடி குதிரை குரங்கு………….அப்பாடா!மனிதன்..மனிதன்..மலர்ச்சியின் சிகரம் நோக்கிஇவனும் ஒரு மைல்கல்லே!வானம் இடி மின்னல் பார்த்துஅதற்கு பின்னால் இருந்துஇயக்கும் விரல்கள் எவை?சூரிய விண்மீன் கூட்டங்களின்திரைச்சீலையைநகர்த்துவது யார்?மைல் கற்கள்ஓடுகின்றன ஓடுகின்றன..இன்னும்அது யார்? அது எது?இந்த உந்தல்கள்ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.காலவெளி எனும்ஸ்பேஸ்டைம் கூட‌பெருவெடிப்பின்முன்முறிந்து போயின.சூன்யம் என்கிற முட்டை கூட‌அங்கே இல்லை.முட்டையா? கோழியா?என்று கேள்வியும் கூட‌மரணித்துக்கிடக்கும்ஒரு வியப்பு நிறைந்த‌பிறப்பின் கன்னிக்குடம்அங்கேஉடையாமல் உடைந்து கொண்டிருக்கிறது.நீஎதையெல்லாம்இப்படி சொல்லிக்கொண்டு போகிறாயோஅதற்கும் முந்தியதுபிரம்மம்.சரி முடிந்து போயிற்று எல்லாம்.கடவுள் […]