ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை – நடந்தது என்ன

 

சபா தயாபரன்

 

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலையில்  சவுதி  இளவரசரை குற்றம் சுமத்தும் அமெரிக்கா புலனாய்வுத்துறை. மறுக்கும் சவூதி அரசு. உண்மையில் நடந்தது என்ன….?.

 

 …

ஊடகவியலாளர்  ஜமால் கஷோக்ஜியின்  கொலை சவூதி அரேபியா  நாட்டின்   முடிக்குரிய  இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் உத்தரவின் பேரிலேயே  நடை பெற்றது என்று    CIA  தன் அறிக்கையில் கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருக்கிறது..ஆனால்  இந்த    அமெரிக்க புலனாய்வு அறிக்கையை  முற்றாக நிராகரிக்கிறது சவூதி அரசு.

 

ஜமால் கஷோக்ஜி. ஒரு ஊடகவியலாளராக  மட்டும் அன்றி    பல ஆண்டுகளாக  சவூதி  அரச குடும்பத்திற்கு நெருக்கமானவராக   இருந்திருக்கிறார். இந்த நிலையில்  2017ஆம் ஆண்டு சவூதி அரச குடும்பத்துக்கும் கஷோக்ஜிக்கும் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் தன்  அவர் 2017ஆம் ஆண்டில்   சவுதியில்   இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார்..

அமெரிக்காவின் நாளிதழான வாஷிங்டன் போஸ்டில், சவூதி  இளவரசர் மொஹம்மத் மற்றும் கருத்து வேறுபாடுகள் கொண்டோர் மீதான அடக்குமுறை, மனிதநேய நெருக்கடியை ஏற்படுத்திய ஏமன் போர் ஆகியவை பற்றி இவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.இதனால் இளவரசர் மொஹம்மத்தின்  கடும் கோபத்திற்கு ஆளாகினார்.

 59 வயதான அவர்  மனைவியை விவாகரத்து செய்த  பின்னர் துருக்கியைச் சேர்ந்த ஹெடிஸ் செஞ்சிசை  திருமணம் செய்ய விவாகரத்து சான்றிதழ் தேவைப்பட்டது.

2018 செப்டம்பர் 28ஆம் திகதி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் சவூதி தூதராலயத்திக்கு சென்றபோது . அங்கு அவரை அக்டோபர் 2ஆம் தேதி வந்து சான்றிதழை பெற்று  கொள்ளுமாறு  அதிகாரிகள்  சொல்கின்றனர்.

 2018அக்டோபர் 2ஆம் தேதி தனது விவாகரத்து சான்றிதல்களை பெற ஜமால் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்தை வந்து சேருகிறார்.

சவூதி துணைத்  தூதரகம் செல்லும் போது இரண்டு தொலைபேசிகளை  அவருடன் வந்த  ஹெடிஸ் செஞ்சிஸிடம் கொடுத்து, ஒரு வேளை நான் திரும்பவரவில்லை என்றால் துருக்கி அதிபர் எர்துவானின் ஆலோசகருக்கு அழைக்க சொல்லி இருக்கிறார்.

எப்போதும் இந்த சவூதி தூதரகத்தை துருக்கி புலனாய்வுத் துறை   உளவு பார்த்து வந்தது. . இஸ்தான்புல்லில் உள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கஷோக்ஜி. சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கும் ஒலிப்பதிவு மற்றும் காணொளி சான்றுகள் துருக்கி அதிகாரிகளிடம் உள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒலி மற்றும் ஒளி நாடாக்களை  ஜமால் கஷோக்ஜி உயிரைவிடும் தருணத்தில்  நடந்தவற்றை  பேசியவற்றை பிரிட்டிஷ் வழக்கறிஞர் பாரோனெஸ் ஹெலனா கென்னடி   கேட்டிருக்கிறார். ஒலி மற்றும் காணொளி பதிவுகளில் கண்டு கேட்டதை  முழுமையாக  விவரிக்கிறார் அவர்.

சவூதி  ஆண்கள் குழு ஒன்று துருக்கிக்கு இஸ்தான்புல் விமான நிலையம் வழியாக வரும் காட்சிகள்,அவர்கள்  தூதராலயத்திற்கு  வந்த  பின் அவர்கள் ஹோட்டலுக்கு  செல்லும் காட்சிகளும், துருக்கியைவிட்டு  அந்த சவூதி குழு  வெளியேறும் காட்சிகளும் அந்த காணொளியில் உள்ளன.

கஷோக்ஜி உள்ளே வரப் போகிறார் என்பதை அறிந்து அவருக்காக  சவூதி குழு  காத்திருக்கிறது. . அன்று  உள்ளூர் துருக்கி உத்தியோகத்தர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

கஷோக்ஜி வந்தபோது குழுவில் உள்ளவர்கள் இவ்வாறு பேசுகின்றனர். ”உயிரைத் தியாகம் செய்யும் அந்த விலங்கு வந்துவிட்டதா” என்று. கஷோக்ஜியை விலங்கு என்றுதான் அவர்கள் அழைக்கிறார்கள். ஓருவர்   மரணிக்கும் தருவாயில் உள்ள  குரலைக் கேட்பது, அவருடைய   குரலின்  பயத்தை அறிவது, அதுவும் நேரடியாகக் கேட்பது என்பது   மிகவும் கொடூரமானது. உடல் முழுதுமே நடு நடுங்கச் செய்யும் விஷயம் அது.” என்று தெரிவித்த கென்னடி ,   அந்த குழுவில்  தடயவியல் நிபுணர் டாக்டர் சலா அல்-துபைஜி உட்பட  ஒன்பது சவூதி  நாட்டவர்கள் இருந்ததாக குறிப்பிடுகிறார். எப்படி பிரேத பரிசோதனை செய்வது என்றும் அவர்கள்  பேசுகிறார்கள். அவர்கள் சிரிப்பதைக் கூட அந்த ஒலி நாடாவில்  கேட்க முடிகிறது” 

”உடல் உறுப்புகளை அறுக்கும்போது பெரும்பாலும் நான் இசை கேட்பேன். சில நேரம் கையில் கோப்பி  மற்றும் சுருட்டு இருந்து  கொண்டிருக்கும். முதன் முறையாக இப்போதுதான் தரையில் வைத்து நான் அறுக்க வேண்டியதாயுள்ளது ,” என்று அவர் கூறியதாக கென்னடி நினைவுபடுத்தி சொல்கிறார். ”கசாப்புக் கடைக்காரனாக இருந்தால் கூட, விலங்கை தொங்க விட்டுத்தான் அறுப்பார்கள்” என்று டாக்டர் பேசியது எல்லாம்  பதிவாகியிருந்தன. 

2018 அக்டோபர் மாதம் 2ஆம் தேதி சவூதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி, இஸ்தான்புல்லிலுள்ள துணைத் தூதரகத்துக்குள் நுழைந்த உடனேயே, அவரது கழுத்து நெரிக்கப்பட்டது என்று துருக்கி விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

”துணிச்சல் மிக்கவரான கஷோக்ஜி, பயம் கொண்டு, பதற்றம் அதிகரித்து, கொடூரம் அதிகரித்த நிலைக்கு மாறும் தருணத்தை பதிவுகள் மூலம் உணர முடிகிறது தனது  உயிரைப் பறிக்கும் வகையில்   ஏதோஓன்று  நடக்கப் போகிறது என்ற  உணர்வு அவரில்   தெரிகிறது,” என்கிறார் கென்னடி.

அவருக்கு  மிகவும் சக்தி வாய்ந்த மயக்க மருந்து உடலில் செலுத்தப்பட்டதாக சவூதி புலனாய்வுத்துறை சொல்கிறது. அதன் பின்னர் அங்கு  கேட்கும் சத்தங்களைக் கேட்டால், அவர் மூச்சுத் திணறலுக்கு ஆளாக்கப்படுவது  மிக  தெளிவாக  உணர  முடிகிறது. அநேகமாக அவருடைய தலையில் பிளாஸ்டிக் உறை போட்டு மூச்சுத் திணறடிக்கப் படுவதாகத் தெரிகிறது,”  அவருடைய வாய் கட்டாயமாக மூடப்படுகிறது அநேகமாக கைகளாலோ அல்லது வேறு ஏதோ பொருளாலோ அவ்வாறு செய்யப்படுகிறது.”

இந்த நடவடிக்கைக் குழு தலைவரின் உத்தரவின்படி, அதற்குப் பிறகு தடயவியல் நிபுணர்    அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வது போல தெரிகிறது என்று கென்னடி நம்புகிறார்.இடையில்  ஒரு குரலோ  அவர் அறுக்கட்டும்’ என்று கூறுவதை கேட்க முடிகிறது.

.கஷோக்ஜி கொல்லப்பட்டதும் அவரது உடல் பல துண்டுகளாக  ஆக்கப்பட்டது என்றும் .அவை பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு உள்ளூர் வாசி மூலம் பெரும்பாலும்  அமிலத்தில் கரைக்கப் பட்டிருக்கலாம் என்றும் துருக்கி புலனாய்வுத்துறை  அதிகாரி  தெரிவித்தார்.

போலியான தாடியுடன் ஒருவர் ஜமாலின் உடையோடு  தூதரகத்தின் பின் கதவு வழியாக செல்வது காணொளியில் பதிவாகியுள்ளது.

ஏறத்தாழ 10 மணி நேரம் தூதரக வாசலிலேயே காத்திருந்திருக்கிறார் ஹெடிஸ் செஞ்சிஸ்.

சவூதி தூதரகத்தில் இருந்து எல்லோரும் வெளியேறுகிறார்கள் . அலுவலகம் மூடப்படுகிறது. பதறிப் போன ஹெடிஸ் செஞ்சிஸ் அங்கிருந்த காவலாளியிடம் ஜமால் பற்றி விசாரிக்கிறார். ஆனால் அவரோ ஜமால் எப்போதே வெளியே சென்று விட்டதாக  . பதிலளிக்கிறார்

அப்போதுதான் எதோ விபரீதம்  நடந்து விட்டதை உணர்ந்த அவர் ஜமால் குறிப்பிட்ட துருக்கி அதிபர் எர்துவானின் ஆலோசகருக்கு போன்   செய்கிறார்.

 அக்டோபர் 20ஆம் தேதி சவூதி   அரசு தொலைக்காட்சி செய்திகளின்படி , ஜமால் கஷோக்ஜி. துணைத் தூதரகத்துக்கு சென்ற பின் அங்கிருந்த அதிகாரிகளுடன் சண்டை நடந்ததாகவும், அச்சண்டை அவரது மரணத்தில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது.அதில் சம்பந்தப்பட்ட  ஐந்து பேருக்கு, சவூதி அரேபிய நீதிமன்றத்தினால்    கடந்த 2020 செப்டம்பர் மாதம் மரணதண்டனை  வழங்கப் பட்டு பின்னர்  தண்டனையை 20 ஆண்டு சிறை தண்டனையாகக் குறைத்ததும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

 

.CIA இன் இந்த அறிக்கை வெளியாகியவுடன் அமெரிக்கா அதிபர் ஜெ பைடன் அதிரடியாக கொலையில் ஈடுபட்டவர்களுக்கும்  சவூதி இளவரசரின்  ஆலோசகருக்கும் தடைகளை விதித்தார்.

முன்னாள் ஜனாதிபதி இந்த கொலை விவகாரத்தில் மௌனம் காத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

 சவூதி அரசின் நடவடிக்கையைப் பொறுத்து  இளவரசர் மொஹம்மத்  மீதும்  

 கூடுதல் தடைகள்   விதிக்கப்பட வேண்டும் என்று ஜனநாயக கட்சியின் செனட்டரும்  செனட் புலனாய்வு கமிட்டியின் உறுப்பினருமான மார்க் வார்னர் FOX நியூஸ் தொலைக்காட்சியில்  கூறினார்.

கஷோக்ஜி காணாமல் போயிருப்பது சௌதியின் இளவரசரின்  பெயருக்கும், உலக நாடுகளோடு சௌதியின் உறவுகளுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று துருக்கியிலுள்ள பிபிசி செய்தியாளர் மார்க் லுவென் கூறியுள்ளார்.

அந்தக் கொலையின்போது தெரிவிக்கப்பட்ட, மனதை உலுக்கும் தகவல் ஒன்று இருந்தது. உடலை சிதைப்பதற்கு எலும்பை அறுக்கும் வாள்  பயன்படுத்தப்பட்டதா என்பதே அது.

sabathayaparan @gmail .com

Series Navigationஆசாரப் பூசைப்பெட்டிகதவு திறந்திருந்தும் …