ஊமை மரணம்

சொற்கள் தேவை இல்லை இனி
மௌனங்களை பேச…
காதுகளை நீ அடைத்துக் கொண்டாய்
நாக்கினை நான் அறுத்து கொண்டேன்…
சொற்கள் செவி பறைக் கிழிக்க
காதுகளையும் அறுத்துக் கொண்டேன் நான்…
கண் அசைவில் மொழி பகிரவும்
நீ விரும்பவில்லை
விழிகளை துளைத்தெடுத்தேன்
எட்டி உதைக்கும் உன் கால்களைக் கண்டேன்
என்னை நானே நுடமாக்கினேன்
ஊமையாய் , செவிடராய், குருடராய்
முடமாய் அசைவற்று நான் நிற்கிறேன்
மனம் மட்டும் மரணிக்கவில்லை…

– தினேசுவரி, மலேசியா

Series Navigation