ஊனம்


கருவண்டு வாசிக்கும்

கவிதை ரோஜாக்கள்

குளிரெடுக்கும் மண்ணைப்

போர்த்திவிடும் புல்வெளிகள்

வந்தாரை வணங்க

வேலி தாண்டும் அரளிகள்

இலைமறைப் பிஞ்சால்

ஏமாறும் அணில்கள்

கொழுந்து மேடையில்

உலாவரும் பூச்சிகள்

காய்க்கரம் நீட்டிக்

கும்பிடும் முருங்கைகள்

வேடிக்கை பார்க்கும்

தென்னங் குலைகள்

ஊனமற்ற இயற்கை சூழ

இல்லம் ஒன்று நடுவே

அது என்ன இல்லமாம்?

‘ஊனமுற்றோர் இல்லம்’

அமீதாம்மாள்

Series Navigationகவிதையும் வாசிப்பும் – 5 -கவிஞர் ஜெயதேவனின் ஒரு கவிதையை முன்னிறுத்தி…..கவிதை நாற்றுகள்