எனது ஆகாயம்

Spread the love

ஆதியோகி

வெள்ளிக்கரம் நீட்டி
நேசமுடன் தழுவ முயன்ற
நேரத்தில்,
கருப்புக் குடை விரித்ததைக்
கண்டனம் தெரிவிப்பதாய்
நினைத்திருக்கலாம்…

கணப்பொழுதில் குடைக்குள்
மறைந்து கொண்டது,
கருமேகங்கள் தவழ்ந்த
அழகான தலை மேல் ஆகாயம்…

                                  – ஆதியோகி

Series Navigationதொடுவானுக்கு அப்பால்இலக்கியப்பூக்கள் 224