என் சுவாசத்தில் என்னை வரைந்து

என்
அறையில் நான்.

நாற்காலி
அதன்
சித்திரத்தை வரைந்திருக்கும்.

மேஜை
அதன்
சித்திரத்தை வரைந்திருக்கும்.

நிலைக் கண்ணாடி
தனக்குள்
தன்
சித்திரத்தை வரைந்திருக்கும்.

வெளிச்சித்திரங்களை
உள்ளே
கூட்டி வந்திருக்கும்
ஆகாயம்.

என்
சித்திரத்தையும்
வரைய ஆரம்பித்தேன்.

மாறிக் கொண்டேயிருக்கும்
என்னை
எப்படி வரைவது?

மேகங்களை
மைக்குப்பியில்
ஊற்றிக் கொள்ளமுடியுமா?

அறைக்குள்ளிருக்கும்
ஆகாயத்தை
மைக்குப்பியில் கவிழ்த்தேன்.

என் சுவாசத்தில்
மறுபடியும் மறுபடியும்
என்னை வரைந்து கொண்டேயிருப்பேன்.

எப்போது
முடியும்?

”முடியும் போது”
முடியும்.

’முடியும் போது’
யார் உயிர் கொடுக்க முடியும்
அதற்கு?

Series Navigationமுள்வெளி- அத்தியாயம் -1‘பெற்ற’ மனங்கள்…..