எழுத்து

Spread the love

கைவிலங்கை உடைத்தெறிந்தால்
சமூகம் அவனை பைத்தியமென
சிறை வைக்கிறது
விதி வெண்கலப்
பாத்திரத்தைக் கூட
வீட்டில் இருக்கவிடாது
எத்தனை இரவுகள்
நீ அருகிலிருந்தும்
நான் விலிகி இருந்தேன்
மனைவியை மதிக்காமல்
உடைமையாக்க முற்பட்டது
மனப்பிறழ்வின் ஆரம்பம்
மெல்லிய லெட்சுமணக் கோட்டை
தாண்டுவதற்கு தயாராகும்
சீதைகள்
உதிர்ந்த இலைகளையும்
வானத்து விண்மீனையும்
விரல் விட்டு
எண்ணிக் கொண்டிருந்தேன்
காலம் அனுகூலமாக இருந்தாலும்
இருபுறமும் கூர் உள்ள கத்தி
ஒருவரை பலி கேட்கிறது.

————————————–

Series Navigationவிசுவும் முதிய சாதுவும்அமரர் மலர்மன்னன் அவர்களுக்கு….