எஸ்.ஷங்கரநாரயணனின் ம.ந.ரா.பற்றிய கட்டுரை

எஸ்.ஷங்கரநாரயணனின் ம.ந.ரா.பற்றிய கட்டுரை சூப்பர். சிற்றிதழ்கள் பால் அவர் கொண்ட ஈடுபாடு விலையில்லாதது. அவரது ‘ அம்மணதேசம் ‘ இப்படி ஒரு வம்புக் கதைதான். ஜெயில் கைதி ஒருவனின் அண்டர்வேர் கிழிந்து விடுகிறது. அவன் வேறு வழியில்லாமல் குடியரசு தினத்தன்று ஏற்றப்பட்ட கொடியை மறுநாள் எடுத்து உள்ளாடையாக பயன்படுத்திக் கொள்கிறான். யாரும் வெளியிட முன்வராத போது நான் சிறகில் வெளியிட்டேன் என்பது இதழுக்குப் பெருமை. இன்றளவும் அவர் என் இதழுக்கு எழுதிவருகிறார் என்பது என்பால் அவர் கொண்ட அன்பின் அடையாளம்.

சிறகு இரவிச்சந்திரன், சென்னை.

Series Navigation“சமரசம் உலாவும்……..”வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – – 7