ஒரு கவிதையின் பயணம்

Spread the love

 

  • சேயோன் யாழ்வேந்தன்

இவ்வளவு நேரமும்

அந்த பூங்கா இருக்கையில் அமர்ந்திருந்த

பறவையிடம் இருந்த கவிதை,

காரணம் ஏதுமின்றி அது பறந்துபோனவுடன்,

இருக்கையில் அமர்ந்து கொண்டது.

இப்போது அந்தக் கவிதையின் மீது

ஒரு பெண் வந்தமர்கிறாள்.

சிறிது நேரம் கழித்து

கவனம் கலைத்து அவள் எழுந்துபோகிறாள்,

பின்புறம் அப்பிக்கொண்ட

என் கவிதை குறித்த பிரக்ஞையின்றி!

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationஆண் செய்தாலும், பெண் செய்தாலும், தப்பு தப்புதான்!`ஓரியன்’ -5