ஒலியின் வடிவம்

 

 

குகைக்கு வெளியே

அவர் வீற்றிருந்தார்

 

“உங்கள் தனிமை பாதிக்கப் படுகிறது”

 

“இல்லை. குகையில் பாம்புகள், வௌவால்கள்,

அணில்கள் யாவும் உண்டு”

 

“உங்களைத் தேடி வந்தது…”

 

“எறும்புகள் உங்கள் இருப்பிடத்தை

ஆக்கிரமிப்பதாய் உணர்ந்ததால்”

 

நான் பதிலளிக்கவில்லை

 

“எறும்புகள் இருப்பிடம் உங்கள்

கண்ணுக்குப் புலனாகாது. நீங்கள்

காண்பதெல்லாம் பாதைகள்”

 

“என் குரலுக்கு வடிவம் உண்டா?”

 

“உங்களிடம் ஆன்மீகப் பிணைப்பு

இருப்பவருக்கு மட்டும்’

 

வணங்கி விடை பெற்றேன்.

 

அடிவாரம் வந்ததும் அவளின்

எண்ணை அழைத்தேன்

Series Navigationசி.மோகனுக்கு விருது விளக்கு (2014) வழங்கும் விழாசிந்தனை ஒன்றுடையாள் ஸம்ஸ்க்ருதம்-தமிழ் பாலம் (தொகுப்பாசிரியர்: டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்)