ஒழிதல்!

இல.பிரகாசம்

விம்மி விம்மிச் செத்துக் கொண்டிருக்கிறது.
அதன் அருகில் நிற்க நிற்க
எனக்குக் கேவலமாகவும்
அருகில் இருந்து விலகிச் செல்ல
எனக்கு பயமும் தொற்றியது.

சட்டெனச் சட்டென
விம்மி விம்மிச் சாகும் நிலைக்கு
வந்துவிட்டது
ஒளி வெள்ளம் பாயப் பாய
ஒழிந்து போனது
இருளுக்கான அமைதியின் ஆற்றாமை

-இல.பிரகாசம்

Series Navigationஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்28. குறைவொன்றுமில்லாத கோவிந்தா