ஒவ்வொன்று

ஏதோ ஒரு
ஆடியில் மட்டும்
பெருக்கு
சிறு ஓடை போல் தான்
நிரந்தரமாய்
நதி தான் அது
ஸ்தூலத்தைத் தாண்டும் சூட்சமம்

இலை கிளை
நடுமரம்
அடிமரம்
மட்டுமே மரம்
வேர்கள் வேறுதான்
சூட்சமம் இல்லை

காலை மதியம் மாலை
நேற்று இன்று நாளை
கடந்தது நிகழ் எதிர்
எல்லாமே காலந்தான்
சூட்சமம் மட்டுமே

மலர்கள் வேறு
மணிகள் வேறு
மாலை வேறு தான்

கோள்கள் வேறு
விண்மீன்கள் வேறு
வானவில் வேறு
வானம் வேறு தான்

மனித உரிமை
பெண்ணுரிமை
சமூக நீதி
மனிதநேயம்
வெவ்வேறாய்
ஸ்தூலம் மட்டுமாய்

Series Navigationகாக்கிச்சட்டை – சில காட்சிகள்சுப்ரபாரதிமணியனின் “ புத்து மண் “ நாவல்