ஒவ்வொரு கல்லாய்….

“கூடங்குளம்”
பெயரில் தான் குளம்.
குடிக்க அதில்
சொட்டுத்தண்ணிர் இல்லை.
அலைந்து திரிந்த காகம்
அணு ஜாடியை கண்டது.

கொஞ்சம்
தண்ணீர் தான் அடியில்.
ஒவ்வொரு கல்லாய்ப்
போட்டால்
“ஆபத்து”இல்லாமல்
தண்ணீர்குடிக்கலாம்.

ஆனால்
இலங்கைக்காக்கைகள்
தமிழ்நாட்டுக்காக்கைகள்
டெல்லி
சாணக்கிய காக்கைகள்
சாணி உரத்துப்
பச்சைக்காக்கைகள்
உலகத்து
“தாராள மய”க்காக்கைகள்
உள்ளூர்
வெள்ளைக்காக்கைகள்
அதிசயமாய் அசலூர்
காவிக்காக்கைகள்
இவையெல்லாம்
படையெடுத்துச் சிறகடித்தால்
“ஜாடி”உடையும்.
பூதமும் கிளம்பும்
அலாவுதீன் பூதம் அல்ல.
அகிலத்தையே தின்னும் பூதம்.

இந்த காக்கைகளின்
கும்பல் நெரிசலில்
தீவிர வாதப்
பருந்து குஞ்சுகளும்
ப‌துங்கியிருக்க‌லாம்.

ஹிரோஷிமா நாக‌சாகிக‌ளுக்கு
அப்புற‌ம் தான்
ஜ‌ப்பான் அமெரிக்காவோடு
நேச‌ம் கொண்ட‌து.
அமெரிக்கா ஜ‌ப்பானிட‌ம்
பாச‌ம் கொண்ட‌து.

ந‌ம்மை நாமே புரிந்து கொண்டால்
நாக‌சாகிக‌ளும் ஹிரோஷிமாக்க‌ளும்
ந‌ம‌க்கு இல்லை.

போலீஸ் ல‌த்திக‌ளே
போலி ச‌க்திக‌ளே
ஏன் இந்த‌
“டாம் அன்ட் ஜெர்ரி”
விளையாட்டு?

ப‌லியாகும் ஒவ்வோரு உயிரும்
ஆயிர‌ம் ஆயிர‌ம்
மெகா ட‌ன் கொண்ட‌
கோப‌த்தின் குண்டுக‌ளாய்
மாறும் அபாய‌ம்
உங்க‌ளுக்கு தெரிய‌வில்லையா?
பேசித்தீர்ப்போம்…..பயப்
பேய்களை விர‌ட்டுவோம்.

=============================================ருத்ரா

Series Navigationபசிலிகுருவியின் குஞ்சு ரத்தம் வழியகிடக்கிறது