கடன் அன்பை வளர்க்கும்

Spread the love
‘வேறு எந்தக் கடனும்
இப்போது இல்லை.’
புதுக் கடனுக்கு
விண்ணப்பிக்க வந்த இடத்தில்
வங்கி மேலாளர்
கேட்கும் முன்னரே சொன்னான்.
முந்தைய கடன்களை
காலத்தே அடைத்ததற்கான
நற்சான்றிதழ்களை
பெருமையுடன் முன் வைத்தான்.
சிணுங்கியது அலைபேசி
‘அப்பா எனக்கு நீ
பத்து ரூவா தரணும்’
அறிவித்தாள் அன்பு மகள்..
முன் தினம் கடற்கரையில்
கடலை வாங்க
சில்லறை இல்லாத போது
தன் குட்டிப் பையைக்
குலுக்கித்தேடி 

எடுத்துத்தந்த
இரு ஐந்து ரூபாய்
நாணயங்களை நினைவூட்டி.
***


-ராமலக்ஷ்மி


Series Navigationசிறுகவிதைகள்தமிழ் படுத்துதல்