கட்டாய உழைப்பு முகாம்களை சீர்திருத்த போவதாக சீனா கூறுகிறது.

china

சீன அரசாங்க ஊடகமான க்ஸின்ஹூவா, இந்த வருடம் சீனாவின் கட்டாய உழைப்புமுகாம் முறையை சீர்திருத்தப்போவதாக அறிவித்திருக்கிறது.  சீனாவின் புதிய கம்யூனிஸ்ட் தலைவராக பொறுப்பேற்கும் க்ஸி ஜின்பிங்  Xi Jinping  தனது உரையில் சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளப்போவதாக வாக்குறுதி அளித்ததன் முதல் படி என்று கூறுகிறார்கள்.

1957இலிருந்து சீனாவில் இருக்கும் “உழைப்பு மூலம் மறுகல்வி”re-education through labour அமைப்பு, சாதாரண குற்றங்களுக்கு கூட எந்த விதமான நீதிமன்றம், வழக்குறைஞர் இடையீடு இல்லாமல் நான்கு வருடங்களுக்கு சிறை தண்டனை கொடுக்கலாம் என்று போலீஸுக்கு அனுமதி அளிக்கிறது. இந்த முறை பொதுவாக அரசாங்கத்தோடு மாறுபடுகிறவர்களை தண்டிக்கவே பயன்படுகிறது என்றும், இது சட்டத்தின் படி ஆட்சி என்பதற்கு மாறாகவும் இருக்கிறது என்று இந்த அமைப்பை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள்.

நாட்டுக்குள் பாதுகாப்புக்கான தலைவரான மெங் ஜியஞூMeng Jianzhu இந்த அமைப்பே நீக்கப்படும் என்று முன்னர் சொன்னதற்கு மாறாக க்ஸின்ஹூவா செய்தி இந்த அமைப்பு சீர்திருத்தப்படும் என்று கூறியிறுக்கிறது. முந்தைய செய்திகள் உடனே செய்தித்தளங்களிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன.

இந்த வருடம் சீன அரசாங்கம், தேசிய அரசியல் மற்றும் சட்ட மாநாடு மூலமாக விவாதத்துக்குரிய “உழைப்பு மூலம் மறுகல்வி” திட்டத்தை சீர்திருத்த முனையும்” என்று க்ஸின்ஹூவா தெரிவித்திருக்கிறது.

முன்பு மெங், ”தேசிய மக்கள் காங்கிரஸின் நிலையான கமிட்டி ஒப்புதல் மூலம் இந்த முறை நீக்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.

தேசிய மக்கள் காங்கிரஸ் என்பது ஒவ்வொரு மார்ச் மாதத்திலும் நடக்கும் சீனாவின் ரப்பர் ஸ்டாம்ப் பாராளுமன்றத்தை குறிக்கிறது.

அறிவுஜீவிகள், மனித உரிமை போராளிகள், வழக்குறைஞர்கள், ஊடகங்கள் ஆகியவைகள் இந்த கட்டாய உழைப்பு முகாம்களை கடுமையாக விமர்சித்து வந்திருக்கிறார்கள்.

இந்த வருடமே இந்த முறை நீக்கப்பட்டால், சட்டம் மூலமாக ஆட்சி என்பதற்கு முதன் படிக்கட்டாக இருக்கும்” என்று ஹே வெய்ஃப்ங் என்ற பீகிங் பல்கலைக்கழக சட்ட பேராசிரியர் தெரிவித்தார்.

க்ஸின்ஹூவா செய்தி  ஊடகத்தின்படி, சீனா முழுவதிலும் 350 உழைப்பு முகாம்களில் 160000 பேர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

நிக்கோலஸ் பெகுலின் என்ற மனித உரிமை கண்காணிப்பு ஆய்வாளர், இது புதிய தலைமை சில சீர்திருதங்களை நோக்கி செல்லும் படி என்று கூறுகிறார்.

இதனை முழுவதுமாக நீக்குவதே சரி என்றும், இதனை சீர்திருத்துவது என்பது, அரசாங்கம் இதனை தொடர்ந்து நடத்துவதும், சற்று கடுமையை குறைப்பதும் என்றுதான் பொருள் என்கிறார்.

அரசாங்க ஊடகமே இந்த அமைப்பின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை உதாரணமாக காட்டியிருக்கிறது. ரின் ஜியான்யூ என்ற கிராம அதிகாரி, அரசாங்கத்தை விமர்சித்ததும் உடனே இந்த கட்டாய உழைப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டதை குறிப்பிடுகிறது.

டாங் ஹுஇ என்ற பெண் தனது மகளை பாலுறவு பலாத்காரம் செய்த ஆண்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்காகவும் இந்த உழைப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார். சில வருடங்கள் கழித்து இங்கிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

சீனா இந்த முறையை சீர்திருத்துகிறதா என்பது, உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளின் சக்தியை பொறுத்தது. இந்த அமைப்புகளே உள்நாட்டுகலவரங்களை கட்டுப்படுத்தவும், கட்சியின் அதிகாரத்தை நாட்டின் மீது திணிக்கவும் உதவுகின்றன.

மூலம்

Series Navigationகணேஷ் vs மூன்றாம் பேரரசு – நாடக அறிமுகம்