கண்டதுமெனைக் களவு கொடுத்தேன் கிருஷ்ணா!

Spread the love

கயல்விழி கார்த்திகேயன்

 

கண்டதுமெனைக் களவு கொடுத்தேன் கிருஷ்ணா!

மயங்கிப் பாசுரமும் இயற்றினேன்,

சூடிக்கொடுத்தேன்..

சிலநாளில் நீ விஷமக்கண்ணன் என்றறிந்தேன்..

கோபிகைகள் கொஞ்சினால் கூட என்ன?

பாமா கிருஷ்ணனோ? ஆனால் என்ன!

கோகுலக்கிருஷ்ணனாம்,

அனந்தகிருஷ்ணனாம்,

நந்தகிருஷ்ணனாம்!

ஏதானால் என்ன?

காதல் குறையாத வரமுண்டு எனக்கென்றிருந்தேன்!

ஒரு நன்னாளின் முன்னிரவில்

ராதாகிருஷ்ணன் நீயென அறிந்தேன்,

இதொன்றில் ஆய்ப்பாடிவிட்டு வந்தேன்,

சூடிய மாலையைத் திருப்பிக் கொடுத்துவிடு

ஆழிமழைக் கண்ணா

Series Navigationகாக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’அமெரிக்காவில் முதன்முதல் பறந்த அபூர்வ சகோதரர்கள்