Posted in

கதை சொல்லி .. நிகழ்ச்சி

This entry is part 10 of 19 in the series 7 பெப்ருவரி 2016

 

திருப்பூர் பெருமாநல்லூர் சாலை பாண்டியன்நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில்          ” கதை சொல்லி ..  “ நிகழ்ச்சி  சனியன்று மருத்துவர் முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது. இலங்கையைச்சார்ந்த குழந்தை நூல்கள் எழுத்தாளர் ஓ கே குணநாதன் கலந்து கொண்டு  குழந்தைகளின் மன இறுக்கத்திலிருந்து  அவர்களை தளர்த்தும் விதமாய் கதை சொல்லி பழக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், கதை வாசிப்பின் அவசியம்,  இலங்கை சிறுவர் கதைகளின் மையம் பற்றியும் விரிவாகப் பேசினார். ( எழுத்தாளர் ஓ கே குணநாதன் 45க்கும் மேற்பட்ட குழந்தைகள் நூல்களை தமிழில்  எழுதியுள்ளார். இலங்கை சாகித்ய மண்டல பரிசு உட்பட பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.

மற்றும் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள் நயினார், சாயிநாதன்,  கொச்சி தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த லட்சுமணன், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்  ஆகியோரும் மாணவர்களுடன் கலந்துரையாடினர். தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி நன்றி கூறினார்.

 

செய்தி: தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி

Series Navigationஇளமுருகு கவிதைகள் — ஒரு பார்வை ‘ கோமுகி நதிக்கரைக் கூழாங்கல் ‘ தொகுப்பை முன் வைத்து…சி. கு. மகுதூம் சாயபுவின் பன்முக ஆளுமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *