கனவுகள்

இரவு கருத்ததும்
கலங்கரை விளக்காய்
ஒளிவிடத் தொடங்குகின்றன
இன்றைக்கான கனவுகள்.

ஒளிர்ந்த விளக்குகள்
பிடறி சிலிர்க்கும்
சவாரிக் குதிரைகளாய்
காற்றில் பறக்கின்றன.

ஆசைக்காற்றில் உப்பி
வண்ண பலூன்களாகி
பருக்கத் தொடங்குகின்றன
கடல் மண்ணிலிருந்து.

பலூன்களைப் பிடித்துச்
செல்லும்போது பறக்கும்
வெப்பக்காற்று பலூன்களாகி
உயரத் தூக்குகின்றன.

வளைந்து திகிலோடு
வாய் உலரப் பறக்கையில்
வால் முளைத்த
பட்டங்களாகின்றன.

வால் நிலவில் மாட்ட
பட்டம் மேகமலையில் முட்டி
மாஞ்சா அறுந்து கிடக்கிறது., விடியலில்
கடல் அலையைப் பார்த்தபடி.

அடுத்த இரவுக்காய்க்
காத்திருக்கின்றன கனவுகள்
பறப்பதற்குப் புதிதான
வாகனங்களை எதிர்நோக்கி..

Series Navigationநாடகம் நிகழ்வு அழகியல். ஒரு பார்வை.பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! விண்வெளியில் நியூட்ரான் விண்மீனைச் சுற்றும் வைரக்கோள் கண்டுபிடிப்பு !(கட்டுரை : 74)