ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 8

This entry is part 37 of 37 in the series 18 செப்டம்பர் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா  தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “கார்ல் மார்க்ஸ் என்னை ஓர் மனிதன் ஆக்கினார்.  பொதுடைமைத் தத்துவம் (Socialism) என்னை ஓர் மானிடனாய் ஆக்கியது.  இல்லாவிட்டால் நான் பல்வேறு கல்வித்துறை அறிஞர்களில் ஒருவனாகி யிருப்பேன்.  மேலும் பொதுடைமைவாதியாக இருப்பதில் நான் பேரளவு பெருமைப் படுகிறேன்.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Everybody’s Political What is What ?) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் […]

முன்னணியின் பின்னணிகள் – 5 சாமர்செட் மாம்

This entry is part 36 of 37 in the series 18 செப்டம்பர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ”ச். நான் அப்படியொண்ணும் ஒசத்தியா அவற்றை மதிக்கல்ல… அறுவைக் களஞ்சியம் அவை.” கண் பொங்க ராய் என்னைப் பார்த்துச் சிரித்தார். ”எப்பிடி தேங்காவெடல் போடறீங்க! அப்பிடிப் பார்த்தாலும், உங்க மாதிரி அவரை மதிக்கிற, அவமதிக்கிற ஆட்கள் சொல்பம் தான். அதை நீங்க ஒத்துக்கிட்டுத்தானே ஆகணும்? இதைச் சொல்ல எனக்கு கூச்சம் கிடையாது. அவரோட நாவல்களை யெல்லாம் நான் ஒருதடவை, ரெண்டுதடவை அல்ல, அஞ்சாறு தடவை வாசிச்சிருக்கேன். எப்ப வாசிச்சாலும் அவை முன்னைவிட அருமையா […]

பஞ்சதந்திரம் தொடர் 9 – காகமும் கருநாகமும்

This entry is part 35 of 37 in the series 18 செப்டம்பர் 2011

காகமும் கருநாகமும்   ஒரு வட்டாரத்தில் பெரிய ஆலமரம் ஒன்றிருந்தது. அதில் ஒரு காக்கையும் அதன் பெட்டையும் கூடு கட்டி இருந்துவந்தன. அவற்றின் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்து பெரிதாவதற்கு முன்பே, அந்த மரத்தின் பொந்தில் இருந்த ஒரு கருநாகம் மேலேறி வந்து சாப்பிட்டு விடுவது வழக்கம். இந்த அக்கிரமத்தால் காக்கைக்கு எவ்வளவோ மனோ வேதனை ஏற்பட்ட போதிலும், வெகுகாலமாக வசித்த ஒரு பாசத்தால் அந்த ஆல மரத்தை விட்டு வேறு மரத்துக்குப் போக அதற்கு மனம் வரவில்லை. […]

உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணி

This entry is part 33 of 37 in the series 18 செப்டம்பர் 2011

புதுக்கோட்டை உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணியளவில் விஜய் உணவக மாடியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் முனைவர் சு. கணேசன் அவர்கள் திருவள்ளுவரும் மேலை நாட்டறிஞர்களும் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். மேலும் திரு பாபு ராஸேந்திரன் அவர்கள் வருங்காலம் வசந்த காலம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். அனைவரும் வருக அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன்.

தமிழ் வளர்த்த செம்மலர்

This entry is part 32 of 37 in the series 18 செப்டம்பர் 2011

முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர், பத்து ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராகவும் உயர்ந்து, தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்ட பெருமகனார் தான் ஜீவா என்ற ஜீவானந்தம் ஆவார். கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா அவர்கள் பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தார். […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -5)

This entry is part 31 of 37 in the series 18 செப்டம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “துயரடையும் என் தோழனே ! நீ விடும் கண்ணீர், செய்த இடரை மறப்போன் சிரிப்பை விடத் தூய்மையானது ! இழித்துரைப்போன் கேலி நகைப்பை விட இனிமையானது ! கொடும் பழிசுமத்தும் வெறுப்பாளியின் இதயதைக் கழுவும் இந்தக் கண்ணீர் துளிகள் ! மனம் முறிந்து போனவனின் துயரைப் பகிர்ந்து கொள்ள உனது கண்ணீர் பாடம் கற்பிக்கும் ! கலில் கிப்ரான் (அன்பு மயமும் சமத்துவமும்) […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (இசை மேதை) (கவிதை -48)

This entry is part 30 of 37 in the series 18 செப்டம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதலரை நேசிக்கும் உன்னை வரவேற் கிறேன் இது தான் உன்னில்லம் ! செதுக்கும் முறையில் காதல் இப்படி வடிவம் அமைக்கும் : காதலை உருக்கிக் கதவை ஆக்கும் ! இல்லத் துக்கு ஆத்மா தலை வாசல் ! +++++++++ சாளரக் கதவின் இடை ஒளியில் தூசிகள் நடனம் ஆடும் ! நமது நடனம் அதுவே உள்ளத்துள் எழும் ஓசையை நாம் ஊன்றிக் கேட்ப […]

இரை

This entry is part 29 of 37 in the series 18 செப்டம்பர் 2011

    அசையும் புழுவுடன், அசைவற்ற மீன்தூண்டில் நரம்பு அனங்குவதற்கென மழிக்கப்பட்டிருந்த தலையுடனும், பழைய தாமிர உலோக நிறத் தோலுடனும். காத்திருந்தான் ஒரு கற்சிலை போல் நீருக்குள்ளிருந்த மீன் அவனைத்தனது வாலை மட்டும் அசைத்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தது. வாலசைவால் சலனப்பட்ட நீர் புழுவையும் சிறிது அலைபாயச்செய்தது ஏதுமறியாத புழு ,மீனின் கண்களை உற்று நோக்கியவாறு வளைந்து நெளிந்து கொண்டிருந்தது. கலங்கிய நீர்த்திரைகளினூடே அவனால் அக்காட்சியைக்காண இயலவில்லை. பின்னர் அதிவேகமாக மீன் தனது வாலைச்சுழற்றி தூண்டில் நரம்புடன் மீனவனை உள்ளுக்கிழுத்து […]

நிலா விசாரணை

This entry is part 28 of 37 in the series 18 செப்டம்பர் 2011

குமரி எஸ். நீலகண்டன்   வெயிலில் வெந்து தணிந்த கடலில் குளித்து முகமெங்கும் மஞ்சள் பூசிய மகாராணியாய் வானமேறி வருகிறது அழகு நிலா…   விரைந்து வருகின்றன அவளைச் சுற்றி வெள்ளியாய் மிளிரும் விண்மீன் படைகள்..   ஓய்ந்துறங்கும் உலகை உற்று நோக்குகிறாள். எல்லாமே உறங்குவதாய் கருதி திருடர்கள் மிக கவனமாய் திருடிக் கொண்டிருக்கிறார்கள்.   வேட்டை நரிகள் அப்பாவிகளை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன.   நாய்கள் குரைத்துக் கொண்டே இருக்கின்றன.   காற்று கதவுகளைத் தட்டித் தட்டி […]

சங்கமம்

This entry is part 27 of 37 in the series 18 செப்டம்பர் 2011

நதியாய்ப் பெருகி கரைகளைப் புணர்ந்து புற்களையும் விருட்சங்களையும் பிரசவித்திருந்தாள். வரத்து வற்றிய கோடையிலும் நீர்க்காம்பைச் சப்பியபடி பருத்துக் கிடந்தன வெள்ளரிகள் கம்மாய்க்குள். காட்டுக் கொடிகளும் தூக்கணாங்குருவிகளும் குடக்கூலி கொடுக்காமல் வேடிக்கை பார்த்தபடி விலகிச் சென்றன அவளை விட்டு. வறண்ட கணவாயாக தூர்ந்திருந்த போது எங்கிருந்தோ ஒரு மேகம் மழையாய்ப் புணர்ந்து சென்றது அவளை. எதிர்க்கமுடியாமல் ஏற்றுக் கொண்டு காட்டாறாகி வேகமெடுத்தவள் வீழ்ச்சியில் விழுங்கத் தொடங்கி இருந்தாள் மனிதர்களை