கனவும் காலமும்

கனவு பறந்து
கொண்டே இருக்கிறது
நினைவு என்ற
இலக்கை நோக்கி…

கனவின்
இறக்கைகளை
கத்தரித்துக் கொண்டே
இருக்கிறது காலம்.

காலம் கனவை
இரவாய் பார்க்கிறது.
கனவு காலத்தைப்
பகலாய் பார்க்கிறது.

கனவோடு பறக்கிற
காலத்தின் போட்டியில்
கனவு காலத்தை
வென்றே விடுகிறது
பலத் தருணங்களில்.

Series Navigationஇதயத்தின் தோற்றம்பிழைச்சமூக‌ம்