Posted in

கயஸ்கானின் காரண காரிய சரித்திரம்

This entry is part 8 of 33 in the series 27 மே 2012

கயஸ்கான் தொடர்ந்து வெற்றுக் கூச்சல்களை போட்டுக்
கொண்டிருந்தான்.வெவ்வேறு குரல்களில்  கூச்சல் போட்டு பழகிய வாய் ஒரு நாள்
சோறு தின்ன மறுத்துவிட்டது.காபி குடிக்கவும் முடியவில்லை. தொழுகைக்கு
ஸப்புகளில் நின்ற போது தக்பீர் கட்ட அல்லாஹுஅக்பர் சொல்லவும்
முடியவில்லை.

என்ன செய்யலாம்..என்று ஆலகால விஷமிறக்கும் நாட்டு வைத்தியர் ஒருவரிடம்
ஆலோசனை கேட்டான். நாட்டுவைத்தியர் நான்கு குளுசைகளை(லேகிய
மாத்திரை)கையில் கொடுத்து ஐந்து நேரம் சாப்பிட வேண்டும் என்றார்.

நான்கு குளுசைகள்தானே இருக்கிறது எப்படி ஐந்துநேரம் சாப்பிடுவது என்று
சைகையால் கேடடபோது வைத்தியர் சொன்னார் …

நான்காவது குளுசையை தின்றுவிட்டீர்கள் என்றால் ஐந்தாவது குளுசை உங்கள்
கையில் தானாக வந்துவிடும் என உறுதியளித்தார்.

கயஸ்கான் நாட்டுவைத்தியரின் ஆலோசனையின்படி முதல் குளுசையை வாயில் போட்டு
தின்றான். ஆனால் ஒரு அதிசயம்  நான்கு குளுசைகளும் அப்படியே இருந்தன. தான்
குளுசையை சாப்பிட்டோமா இல்லையா என கயஸ்கான் தலையைப் பிய்த்துக் கொண்டான்.

நான்கு குளுசையையும் தின்றால்தானே ஐந்தாவது குளுசையை சாப்பிடமுடியும்
என்ற குழப்பத்தில் கயஸ்கான் என்னென்வோ சேட்டைகளை செய்ய ஆரம்பித்தான்.

ஒரு ரவுடிக்கும்பலை ஏற்பாடு செய்து அந்த நாட்டு வைத்தியரை அடி கொடுத்து
ஆளையே கிழித்துப்போடலாம் என திட்டமிட்டான்.அபுஜஹில் காலத்து எழுத்தாணியை
கையில் வைத்து சப்பி கிப்பி என ஒரு மிரட்டல் கடிதத்தை எழுதினான்.

கொஞ்ச நேரத்தில் பார்த்தால் வைத்தியர் கொடுத்த குளுசைகள் ஒவ்வொன்றும்
அர்த்தத்தோடு கூச்சல் போட்டு கயஸ்கானை விரட்டத் தொடங்கின.

கயஸ்கான் பின்னங்கால் பிடரியில் தெறிக்க பறையங்கால் வாய்க்காலை நோக்கி
ஓடினான்.தொப்பென்று சத்தம் கேட்ட

Series Navigationமுள்வெளி அத்தியாயம் -10என்னுடைய திருக்குறள் புத்தகத்தைப்பற்றிக் கட்டுரை வடிவில் விளம்பரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *