கலாம் ஆ.. ப. ஜெ. அப்துல் கலாம்

தே. பிரகாஷ்

அவுல் பகிர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம்

அவர் பெயர் ஜெயத்தீயின் அனல் அடிக் கலாம்

அடிமைப்பட்ட நெஞ்சத்தினை விடுவிக் கலாம்

அக்னிச் சிறகுகள்  கொண்டு ஜெயித்து கலக் கலாம்

அசரச் செய்யும் தோல்விகளை பொறுக் கலாம்

அடிபட்டு வெற்றிக்கனிகள் பறிக் கலாம்

அதிகார சிபாரிசுகள் மறுக் கலாம்

அதிகாரிகளாய் தொலைநோக்குடையவரை ஏற் கலாம்

அசலாம் அலேக்குடன் திருக்குறளை கலக்  கலாம்

அதர்ம சக்தியை அறிவியல் கொண்டு மடிக் கலாம்

அந்நியரின் பலத்தை பலம் கொண்டு எதிர்க் கலாம்

அடிப்படையாய் முன்னேற்ற பாதைகள் வகுக் கலாம்

அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக் கலாம்

அவர் வழியில் எல்லோரும் சேர்ந்து நிற் கலாம்

அகத்திலெழும் அழுக்கை நீக் கலாம்

அற்புத உலகை படைக் கலாம்

அமைதி எங்கும் நிலைத்திருக் கலாம்

                                                                                தே. பிரகாஷ்

 

 

 

Series Navigationகவி நுகர் பொழுது-கருதுகோள்குடை