கவிஞர் நா.முத்துக்குமாருக்கு அஞ்சலி

மீனாள் தேவராஜன்

முத்துக்கள் கோர்ந்த கவிதைகள்

முத்தமிழ் சேரும் கவிதைகள்

மனப்பையில் வைத்துப்பார்க்கிறேன்

என்னை அது தொட்டுத்தொட்டுப் பார்க்கிறது

என் உதடுகள் உன் கவிதை பாடும்

என் உள்ளம் உன்னை நினைக்கும்

அன்றொரு பாரதி குயில் பாடிச்சென்றான் அறக்கப்பறக்க!

அதுபோல் நீயும் சென்றுவிட்டாய்! சிறுவயதிலே சீராளா!

புதுமை கவிதைகளைத் தந்த பட்டுக்கோட்டையாரன்ன

புது கருத்துக்களைப் பாடிப் பறந்து விட்டாய்

நீண்ட நாள்கள் நிலம் நின்று பாடல் தேவையில்லை

நாங்கள் இயற்றிய சுந்தரக் கவிதைகளைச்

சொல்லிப் பழகுங்கள்! அவை தித்திக்கும் என்றும்

நித்தம் நித்தம் தந்தால் எங்களை நீங்கள் நினைக்கமாட்டீர்

கொஞ்சம் கொடுத்தாலும் நெஞ்சு நிறையக் கொடுத்துவிட்டோம்

அமுதசுரபியை, அள்ளிப் பருகுவீர் ஆனந்தம் அடையுங்கள்

என்றோ நரை முளைக்கும் முன்னரே பூமிச்சிறை

விட்டுப் பூக்கள்போல்  மண்ணில் மறைந்துவிட்டீர்!

மண்ணுள்ளவரை உன் புகழ் நிலவும்.

 

எழுதியவர்

மீனாள் தேவராஜன்

சிங்கப்பூர்

Series Navigation“என் கனவுகளுக்காக கர்ப்பம் தரித்தவளே”ரிஷான் ஷெரீஃபின் கவிதை – ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு