கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கீதம் (கவிதை -41)

This entry is part 18 of 47 in the series 31 ஜூலை 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

அறுபது ஆண்டுகளாக
மறதி எனக்கு
ஒவ்வொரு நிமிடமும் !
என் மீதுள்ள இந்த நோக்கம்
நின்ற தில்லை !
வேகம் தணிவ தில்லை !
எதற்கும்
தகுதி இல்லாதவன் !
புதிரான மனிதர் வரவேற்கும்
விருந்தாளி அல்லன்
வீட்டு உரிமை யாளிக்கு
மீட்டுவேன்
இசைக் கருவியை !
என்னிடம் உள்ள
அத்தனையும் இன்று சமர்ப்பணம்
அவருக்கே !

++++++++++++

நேற்றிரவுக் கூட்டத்தில்
நின் திருமுகம் கண்டேன் !
வரவேற்கும் எனது
கரங்களில் உன்னை
வாரி அணைக்க
ஆர்வ மில்லை !
ஆதலால் உனது
கன்னத்தில் முத்த மிட்டேன்
அண்டிக்
காதருகில் இரகசிய மாய்ப்
பேசுவது போல்
பாசாங்கு செய்து !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 26, 2011)

Series Navigationசிறைகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகமும் -2)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *