கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (ஓங்கிப் பாடு பாட்டை) (கவிதை -45)

This entry is part 31 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

ஆலோசனை எதுவும் உதவாது
காதலர் தமக்கு !
மலை நெடுவே ஓடும்
நீரோட்டம் போலில்லை
அவருக்குக் குறுக்கிடும்
அணையின் திறம் !
குடிகாரன் உணர்ச்சி
ஒரு ஞானிக்குத் தெரியாது !
காதலருக்குள் தம்மை இழந்தவர்
அடுத்தென்ன செய்வார்
என்றறிய முயலாதே !
மேற்பதவி யாளன்
தன் பதவியைக் கைவிடுவான்
தனியாகக் காதலியுடன்
வீட்டில்
மாட்டிக் கொண்டால் !

+++++++++

மலை ஊடே ஒருவன்
துளையிட முயல்வான் !
ஒருவன் பெற்ற பட்டங்களைத்
துறப்பான் !
மேதையின் மீசையைப் பார்த்து
ஒருவன் சிரிப்பான் !
இந்த வாழ்வு மரத்துப் போகும்
அந்த அமுதை ஒருதரம்
சுவைக் காது போயினால் !
ஓவ்வோர் இரவும் தோன்றி வானில்
சுழலும் விண்மீன்கள்
குழப்பம் அடையும் !
சலிப்படையும் அவை யெல்லாம்
தவிப்புற்று !
எத்தனை நாட்கள்
இப்படிச் செய்வ தென்று நோகும் !

+++++++++++++

புல்லாங் குழலான இந்தப் புவியை
எல்லாம் வல்ல இறைவன்
இனிதாய் ஊதுகிறான்.
ஒவ்வோர் இசைப் பாட்டும்
எழுப்பிடும்
உணர்வோ, கடும் வலியோ
எம்மில் யாராவது
ஒருவரைச் சாரும் !
ஒலி மூலம் கிளம்பும்
உதடுகளை நினைப்பாய் !
தெளிவாய் இருக்கட்டும்
உன் பாடல்.
முற்றுப் புள்ளி வைக்க
முயலாதே !
ஒவ்வொரு வரும் தம் தம்
வீட்டுக் கூரை மீது ஏறுவீர்
பாட்டை
ஓங்கிப் பாடிக் கொண்டு

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 24, 2011)

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -2)அழியும் பேருயிர் : யானைகள் திரு.ச.முகமது அலி
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *