கவிதைகள்

பலி

மாக்கல் நந்தி
வளருகிறதாம்
பிள்ளையார்
பால் குடிக்கிறதாம்
மண்ணடி இயேசு
மறுபடி வருவாராம்
புத்த பிக்குகள்
அஹிம்சையை
தொலைத்துவிட்டார்கள்
பாம்பு
சீண்டினால் தான்
சீறும்
கங்கையில்
தொலைப்பதற்காகத்தான்
பாபங்களை சுமக்கின்றீர்களா
பணமுதலைகளா
வாருங்கள் உங்களுக்கு
தங்கத்திலான சிலுவை
தயாராக இருக்கிறது
பரலோகத்திலும்
பாகுபாடு காட்டினால்
இகலோத்தில் வாழ்வு
இம்சையாக ஏன் இருக்காது
ஒருமனதாகச் சொல்லுவோம்
எல்லாவற்றுக்கும் காரணம்
மதம் தான் என்று
போருக்கு பலி கொடுக்க
அரவானைத் தேடும்
உலகமிது.

————————————–

கொலை தெய்வம்

சும்மா இருந்து
தொலைத்தேன்
பட்டையா நாமமா
என்பது இப்போது இவர்களுக்கு
பெரிதாக போய்விட்டது
பீடாதிபதிகளுக்கும்,மடாதிபதிகளுக்கும்

ராஜ போக வாழ்வு
திருடத் தெரிந்தாலும்
தெத்தத் தெரியணுமே
இவனது சகாக்களுக்கெல்லாம்
கபடம் நிறைந்த உலகில்
தப்பிப் பிழைக்கும்
சூத்திரம் தெரிந்து போனது
இவனுக்கு மட்டும்
பொசிப்பில்லாமல் போனது
இவனது கையாலாகாத தனத்தை
நினைத்து வருந்தும் போது
வில்ஸ் ஃபில்டர் அடிக்காமல்
இருக்க முடியாது
விருதா வாழ்வில்
இவன் போதையில்
மரணத்துக்கு
ராஜபாட்டை விரிப்பான்
வீட்டில் ஏது
பாத்திரம் பண்டம்
எல்லாம் அடகுக் கடையில்
குல தெய்வம்
பாபத்துக்கு அஞ்சுபவனின்
வம்சத்தைக் காக்க
கொலையும் செய்யும்.
Series Navigationவதம்மணலும், நுரையும்! (4)