கவிதை

எங்கே
இருக்கிறேன்
நான்?
எங்கேயோ
இருக்கிறேன்
நான்

எங்கே போய்விட்டது
அது?
எங்கேயோ போய்விட்டது
அது

எப்படி இருந்தது
அது!
எப்படியோ மாறிவிட்டது
அது!

எப்படி இருக்கவேண்டும்
அது?
ஏன் அப்படியில்லை
அது?

இனி
அப்படித்தான் இருக்கும்
அது

அப்படித்தான் இருக்கும்
அது
என்று சொல்லவும் முடியாது

எப்படி எப்படியோ
மாறிக்கொண்டுபோகும் அதை
என்னசெய்வது?

எப்படி இருந்தால்
என்ன?
அது
அதுதான்

நாம்
நம்
கவிதை செய்வோம்

Series Navigationஒன்றும் தெரியாதுஅவளின் தரிசனம்