நைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவக் காட்சிகள் -5

This entry is part 3 of 11 in the series 15 மே 2016

(Ancient Great Egyptian Paintings) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   ‘ஓவியன் எல்லா வித மாந்தரையும் விட உன்னதப் படைப்பு அதிபதி! … உயர்ந்த மலைத் தொடுப்பிலிருந்து, புல்வெளிச் சாய்தளம் கடற்கரை நோக்கிச் சரியும் காட்சியை வரைய விழைந்தால், அந்த வேட்கைக்கும் அவனே அதிபதி! பிரபஞ்சத்தில் எந்த ஓர் உருவமும் மகத்துவத்தில், தோற்றத்தில், கற்பனையில் உதயமாகி நிலைத்தாலும், முதலில் ஓவியன் தன் மனதில் படம் பிடித்த பிறகுதான் கையால் வரையத் துவங்குகிறான்! ‘ […]

தொடுவானம் 120. ஜப்பானியர் ஆட்சியில் சிங்கப்பூர்

This entry is part 2 of 11 in the series 15 மே 2016

            உலகின் மொத்த நிலப்பரப்பில் கால் பகுதியை ஒரு காலத்தில் ஆண்டது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அல்லது சாம்ராஜ்யம். அதில் சூரியன் அஸ்தமிப்பதில்லை ( The Empire on which the sun never sets ) என்று கூறுவார்கள். காரணம் உருண்டையான உலகின் எப்பகுதியிலாவது சூரியன் இருந்துகொண்டுதான் இருக்கும். அந்தப் பகுதியும் பிரிட்டிஷார் ஆட்சியில்தான் இருக்கும்! உலகின் பலம் பொருந்திய இராணுவ பலத்தைக் கொண்டிருந்தது பிரிட்டிஷ் இராணுவம். அதில் அவர்களின் […]

ஆண்களைப் பற்றி

This entry is part 1 of 11 in the series 15 மே 2016

விஜய் விக்கி பாயும் ஆறு முதல் பதறவைக்கும் புயல் வரையிலும் எங்கும் எதிலும் பெண்களின் நாமம்தான்.. அரசியல் முதல் அறிவியல்வரைக்கும் பெண்ணுரிமை பற்றிய பேச்சுகள்தான்.. நிலவு, காற்று, வானம் என வர்ணிக்கும் அழகெல்லாம் பெண்களுக்கென்றே உரித்தாகிவிட்டது.. பெண்களை சுற்றியே சுழல்கின்ற இந்த உலகத்தில், ஆண்களைப்பற்றி எண்ணிப்பார்ப்பதே அபூர்வமான சிந்தனையாகிவிட்டது.. அந்த அபூர்வ சிந்தனையின் ஒரு துளிதான் இந்த கட்டுரையும்… ஒரு ஆணுக்கு எது அழகு? பெண்களை கவர்கின்ற ஆண்களின் ஆளுமைதான் அழகு.. ஆறு அடிகள் உயரமும், ஆஜானுபாகுவான […]

உள்ளிருக்கும் வெளியில்

This entry is part 4 of 11 in the series 15 மே 2016

செம்மை கூடிய வானவெளியின் அரிய தருணத்தைச் சிறைப்படுத்தியிருந்த புகைப்படத்தில் ஒரு கோடுபோல் தெரிந்தது என்ன பறவையோ என்றே துடிக்கிறது மனச்சிறகு அலைபேசி உரையாடலில் லத்தின் அமெரிக்கப்பாடலை  சிலாகித்துக்கொண்டிருக்கிறார் நண்பர்.  பின்னணியில் குழந்தைகளின் விளையாடற் கூச்சல் “டேய் அந்தண்டை போங்க “  தொடர்கிறார் அவர் லத்தின் அமெரிக்காவிலிருந்து நான் அந்த முற்றம் இறங்கிவிட்டேன் என்ன ஆட்டமாயிருக்கும் ஜம் பம்மென அதிரும் இசைக்குள் வளைந்து குழையும் ஒரு புல்லாங்குழல் துணுக்கு சட்டென்று பதிந்து இழைகிறது எல்லாம் தாண்டி நாள் முழுக்க […]

காப்பியக் காட்சிகள் 4.சிந்தாமணியில் சமண சமயத் தத்துவங்கள்

This entry is part 5 of 11 in the series 15 மே 2016

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,                மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.                         E-mail: Malar.sethu@gmail.com இந்தியாவில் ​தோன்றிய ப​ழை​மையான சமயங்களில் சமண சமயமும் ஒன்றாகும். மனிதர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வாழ்வியல் உண்​மைக​ளை எடுத்து​ரைக்கும் சமயமாக சமணம் விளங்குகின்றது. வாழ்வியல் உண்​மைக​ளை​யே வாழ்வியல் தத்துவங்கள் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். சமண சமயம் எடுத்து​ரைக்கும் பல்​வேறு வாழ்வியல் தத்துவங்க​ளை சிந்தாமணிக் காப்பியம் க​தைவழியாகவும் கருத்துக்கள் வழியாகவும் ​தெளிவுற விளக்கிச் ​செல்கின்றது. சீவகன் சமணத் தத்துவங்க​ளை அறிய விரும்பினான். தன் […]

நீ இல்லாத வீடு

This entry is part 6 of 11 in the series 15 மே 2016

  சேயோன் யாழ்வேந்தன்   நீ இல்லாத வீடு நீ இல்லாத வீடு போலவே இல்லை. என் ஆடைகள் அனைத்திலும் உன் கைரேகைகள் நிரந்தரமாகப் படிந்திருக்கின்றன. பொருட்கள் எல்லாம் நீ வைத்தது வைத்தபடியே உள்ளன. இட்லிப் பொடியிலும் தக்காளித் தொக்கிலும் உன் வாசம்தான் வீசுகிறது. கிண்ணத்தில் நான் ஊற்றிவைத்த பாலை சீண்டாமல் பட்டினி கிடக்கிறது கர்ப்பிணிப் பூனை. மாடி வீட்டு பாப்பா துணிக்கொடியில் என் உடைகள் மட்டும் காய்வதை துவேஷமாகப் பார்க்கிறது. நீ இல்லாத வீடு வீடு […]

மே-09. அட்சய திருதியை தினம்

This entry is part 7 of 11 in the series 15 மே 2016

அறிவினைப் பெற்று அழகுடன் திகழ ஆன்றோர் காட்டிய அட்சய திருநாள்! வறியவர் வாழ்வில் வாஞ்சைக் கொண்டு வழங்கிடும் தானம் வாழ்த்திடும் இந்நாள்! குறிக்கோள் வைத்து குவலயம் காக்க கொடுப்பது பெருகி குவிந்திடும் தன்னால்! தெறிக்கும் உண்மை தேசம் தோறும் திடமாய் நின்று தீரட்டும் உன்னால்! வணிக நோக்கம் வளர்த்திடும் சிலரால் வளமாய் சுயநலம் வருவதோ திருநாள்? புனிதம் நிறைந்து புண்ணியம் பெருக பூத்திடும் வாழ்வே புதுமைத் திருநாள்! மனிதம் வளர்க்கும் மாபெரும் பணியே மண்ணில் சிறந்த மங்கலத் […]

ஒன்றும் தெரியாது

This entry is part 8 of 11 in the series 15 மே 2016

அன்பழகன் செந்தில்வேல் கல்யாணமோ சடங்கு வீடோ கபடி விளையாட்டோ கட்சி கூட்டமோ பழனிச் சாமி அண்ணன் கொண்டு வரும் சோடா கலர் மென் பானங்கள்தான் நாவிற்கு தித்திப்பாய் இருக்கும் நாகல் குளத்தடி கிணற்று ஊற்றுத் தண்ணீரில் உருவான அப்பானங்கள் தேவாமிர்தமாய் இருக்கும் தண்ணீருடன் கார்பனேற்றி ஆதுரமாய் ஹெர்குலிஸ் சைக்கிளில் சோடா பானங்களை எடுத்து வருவார் அண்ணன் சுற்றுப் புற கிராமங்களிலும் மயில் மார்க் பானங்கள் அத்தனை பிரபலமாய் இருந்தது தாகமோ வயிற்று வலியோ அஜீரணமோ அண்ணனின் மென் […]

கவிதை

This entry is part 9 of 11 in the series 15 மே 2016

எங்கே இருக்கிறேன் நான்? எங்கேயோ இருக்கிறேன் நான் எங்கே போய்விட்டது அது? எங்கேயோ போய்விட்டது அது எப்படி இருந்தது அது! எப்படியோ மாறிவிட்டது அது! எப்படி இருக்கவேண்டும் அது? ஏன் அப்படியில்லை அது? இனி அப்படித்தான் இருக்கும் அது அப்படித்தான் இருக்கும் அது என்று சொல்லவும் முடியாது எப்படி எப்படியோ மாறிக்கொண்டுபோகும் அதை என்னசெய்வது? எப்படி இருந்தால் என்ன? அது அதுதான் நாம் நம் கவிதை செய்வோம்

அவளின் தரிசனம்

This entry is part 10 of 11 in the series 15 மே 2016

நான் படுக்கைக்கு எப்போது எப்படி வந்தேன் வியந்தபடி எழுந்தான் புள்ளினங்கள் விடிவெள்ளிக்கு நற்காலை வாழ்த்துகையில் நகை தாலி கூரைப்புடவை வைத்த இடத்தில் அப்படியே அவள் எங்கே? தாழிடாமல் வாயிற்கதவு மூடப்பட்டிருந்தது அவள் வந்ததே கனவோ? மீண்டும் அறைக்கு விரைந்தான் அவள் அமர்ந்த இருக்கைக்குக் கீழ் சிதறிய காட்டுப்புக்கள் வாடாமல் சிரித்தன குதிரையை விரட்டினான் பனித்துளிகள் படர்ந்த மலைவனத்தில் சுனை அருகே நினைவில் தேடி அடைந்தான் நேற்று புற்களாயிருந்த இடத்தில் ரோஜாக்கள் இளங்காலைப் பொற்கதிர்களில் புன்னகையில் மிளிர்ந்தன எங்கே […]