கவிதை


 

இல்லாத எல்லைக்குள்

சொல்லாத சொல்லைத்

தேடும் யாத்ரீகனின்

கைவிளக்கு

 

எண்ண ஊடல்களின்

சொற்கூடல்

 

கடக்கும் காலனின் நிழல்

 

கனவுக் கடலை

கடக்கும் தோனி

 

சிந்தனை நிலங்களடியில்

கணக்கற்ற கனிகளின்

எதிர்காலம் தேக்கியிருக்கும்

ஒற்றை விதை

 

வாழ்வின் அர்த்தம் வேண்டும்

வார்த்தை யாகம்

 

கவிஞனின் இருப்பின் சாட்சி

 

அனைத்துமளித்த அகிலத்துக்கு

அவனது நினைவுப் பரிசு

 

ஒரு வாழ்க்கையில்

ஓராயிரம் வாழ்வை

வாழத் துடிக்குமவன்

பேராவலின் நீட்சி.

 

– வருணன்.

Series Navigationமுடிவுகளின் முன்பான நொடிகளில்…மழைப்பாடல்