Articles Posted by the Author:

 • பிரதிநிதி

  பிரதிநிதி

  —————– குழப்பங்கள் கருக்கொண்டு பிரசவித்த சூன்யத்தினுள் கரைந்தபடி காலம் தொப்புள்கொடி அறுபடும் முன்னரே தாயையிழந்த பிஞ்சாய் பற்றிக் கொள்வதற்கோரு விரல் தேடி வீறிடுகிறது வறண்ட மனம் பலநூறு பகலவனாய் சுட்டெரிக்கின்றன இயலாமைகள் என் ஆகாயத்தை ஏங்கித் தவிக்கின்றன என் பாலைவன ஏக்கங்கள் நிசியிலுறங்கா ஓநாயின் ஓலத்தோடு கரைகிறதென் கதறல் அருகிலிருக்கும் அரவத்தின் கிசுகிசுப்பில் பயந்து ஒடுங்குகிறதென் சுயம் என்னுடைய வாழ்வை என் பயங்கள் வாழ்கின்றன.


 • கேள்விகளின் வாழ்க்கை

  கேள்விகளின் வாழ்க்கை

  ================= நம்மோடு நம்மிடையே வாழ்கின்றன நம் கேள்விகளும் பேருந்துப் படிக்கட்டுகளில் தொங்கியபடி சில மின்சார ரயில்களில் அருகமர்ந்தபடி சில மழையில் நனைய மறுத்து நாம் ஒதுங்கும் நிழற்குடைக்குள் ஒண்டியபடி சில கேள்விகள் நம்மிடையே வாழ்ந்து கொண்டேதானிருக்கின்றன அவைகளின் இருப்பை அறியாதார் நாமே மனிதரின் வாழ்விடங்களையெல்லாம் அவை தம்முடையதாக்கிக் கொள்கின்றன தாயைத் தொலைத்த மகவைப் போல சில மாந்தரே வாழா இடங்களிலும் வாழ்கின்றன தம்மைப் பெற்றவர் யாரெனும் ரகசியம் தெரியாமலேயே. – வருணன்.


 • கடவுளும், கலியுக இந்தியாவும்

  கடவுளும், கலியுக இந்தியாவும்

  தசவதாரங்களைத் தாண்டி தானெடுத்த அவதாரமொன்றில் பிறந்தார் இறை மத்தியத்தரக் குடும்பமொன்றில் புத்திரனாய் பந்தய வாழ்க்கையில் வாடகை சுவர்களுக்குள் அலாரங்களின் ரீங்காரங்களுக்கிடையே சீராய் வளர்ந்தான். **** டொனேஷன் படிப்பாயினும் கருத்தாய் பயின்று முதல்வனாய் பவனி அந்தோ பரிதாபம்! ‘கோட்டா’க் கூறு போட்டதில் திசை மறந்த பந்தாய் கிடைத்த கல்லூரியில் தொடர்ந்தது இத்திருநிறைச் செல்வனின் பயணம். **** படித்த மிதப்பில் தந்தையின் நிலத்தில் கால் பதியாது இறுமாந்திருந்தான். சொல்லிச் சலித்த தந்தையின் ஆவி சொல்லாது ஒரு நாள் ஆகாயம் கிளம்பிட […]


 • கவிதை

  கவிதை

    இல்லாத எல்லைக்குள் சொல்லாத சொல்லைத் தேடும் யாத்ரீகனின் கைவிளக்கு   எண்ண ஊடல்களின் சொற்கூடல்   கடக்கும் காலனின் நிழல்   கனவுக் கடலை கடக்கும் தோனி   சிந்தனை நிலங்களடியில் கணக்கற்ற கனிகளின் எதிர்காலம் தேக்கியிருக்கும் ஒற்றை விதை   வாழ்வின் அர்த்தம் வேண்டும் வார்த்தை யாகம்   கவிஞனின் இருப்பின் சாட்சி   அனைத்துமளித்த அகிலத்துக்கு அவனது நினைவுப் பரிசு   ஒரு வாழ்க்கையில் ஓராயிரம் வாழ்வை வாழத் துடிக்குமவன் பேராவலின் நீட்சி. […]


 • இரவை வென்ற விழிகள்

  இரவை வென்ற விழிகள்

  துஞ்சாத கண்களும் துயிலாத இரவும் உருட்டிய பகடையில் விழுந்தது முதல் தாயம் ஆட்டத்தை துவங்கியது இரவு. உறங்காத இரவிற்குள் சலனமின்றி உறங்கிய கனவு ஏணிகள் வழியாய் அசுரப் பாய்ச்சலில் நகர்வு. எதிவந்த அரவங்களின் வாய்தனில் அகப்படாமல் தாண்டித் தாண்டி தொடர்ந்தன கண்கள் மூன்றாம் யாமத்தைத் தாண்டியும் வெற்றி தோல்வியின்றி தொடர்ந்த உருட்டல்களில் எல்லாப் பிடிகளுக்கும் நழுவிய இரவு இறுதியாய் வைகறையின் வாயில் சிக்குண்டது. – வருணன்


 • சமன் விதி

  சமன் விதி

  பிடிகள் தேடி கைகளும் ஆதாரங்கள் தேடி கால்களும் அலையும். உயிர்வளிக்காய் பிதற்றும் நுரையீரல்கள்… வெள்ளி மறைந்து நாளை குறித்த ஐயங்கள் முளைக்கையில் எங்கோ தூரத்தில் ஓர் ஊர் குருவி தனக்கான கூட்டை கட்டி முடித்திருக்கும். பெருவேதனைக்குப் பின்னே பிரசவித்த மகவு கண்டு வலி மறந்து புன்முறுவல் பூப்பாள் சில நொடிகளுக்கு முன் பிறந்த அன்னை. – வருணன்.


 • கணமேனும்

  குழந்தைகள் பற்றிய எந்த கவிதையையும் நினைக்கையிலும் வாசிக்கையிலும் வரிகளினூடே திரிகின்றனர் எண்ணற்ற குழந்தைகள். நமது குழந்தையோ நண்பரின் குழந்தையோ எதிர் வீட்டுச் சிறுமியோ பயணத்தில் அருகமர்ந்த சிறுவனோ… நினைவுகளில் புதையுண்டு கனவுகளில் பிறப்பெடுக்கும் தொலைந்த நம் பால்யமோ… அலங்காரங்கள் அவசியப்படாத எந்த குழந்தையைப் பற்றிய கவிதையையும் சுகிக்கையிலும் எழுதுகிற நானும் வாசிக்கிற நாமும் மீண்டும் மழலைகளாகிறோம் கணமேனும்.   -வருணன்  


 • எனக்குச் சொந்தமில்லா உன் பெயர்

  எனக்குச் சொந்தமில்லா உன் பெயர்

    அதீத வாஞ்சையொன்று முட்டித் தள்ள உந்துதலில் உரைக்கிறேன் உன் பெயரை வெண்புகை குடை விரித்த மலைச் சிகரத்தினுச்சியில் காற்றில் தவழ்ந்த பெயரோ நேற்றுப் பிறந்த மழலையாய் சிணுங்கி அடர் பச்சை ஊசியிலை மரங்களின் இலைகளின் கைகுலுக்கி நீர் சுனையொன்றில் குளிக்கக் குதித்தது. மலையின் மடியில் வீசிய நெற்பயிரின் தலை கோதி நெல்மணியின் கரம் பற்றி ஊசலாடி கரைகின்றது காற்றில் இதுவரையில் உறவாடிய உன் பெயர் கூட இனியெனக்குச் சொந்தமில்லை. அது எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அங்கேயே கொடுக்கப்பட்டது. […]


 • வேரற்ற மரம்

  சொல்லாமல் செல்வதால் பெருகும் வலியை உனது இருபின்மையால் உணர்கிறேன். நிழல் போல வருவதாய் நீ வாக்களித்திருந்த வரிகள் எனது நாட்குறிப்பின் பக்கங்களில் வரிகள் மட்டுமே அருகிருந்து சொற்களை அர்த்தப்படுத்துகின்றன. எனது வாழ்க்கை வனத்தில் இது நட்புதிர்காலம்… வெறுமை பூத்த கிளைகள் மட்டும் காற்றின் ஆலாபனைக்கு அசைந்தபடி அகத்தே மண்டிய நினைவின் புகையாய் அவ்வப்போது வியாபிக்கிறாய் என்னை நமது நட்புறவின் குருதியை நிறமற்ற நீராய் விழிகளினின்று உகுக்கும்படி புன்னகை ஒட்டிய உதடுகளுடன் கைகோர்த்தபடி புகைப்படங்களில் மட்டும் நீ வேரற்ற […]


 • நகர் புகுதல்

  அர்த்தமிழந்த வார்த்தைகள் சமைக்கும் தருக்கச் சகதியுள் அமிழ்ந்தென்ன லாபம் துடிதுடிக்க காலத்தைக் கொல்வதைத் தவிர கால்களையும் கைகளையும் குரல் வலையையும் சுற்றியிறுக்கும் மொழியின் வேர்களும் கொடிகளும் மண்டிய வனம் சொற்களுக்கு அனுமதியில்லா நகரமொன்று வேண்டும் வன வாசம் துறந்து நகர் புக.   – வருணன்