கவிதை

ப. சுடலைமணி

நீண்ட நாள்களாகவே
கொல்லையில்டி சிட்டுகளைக்
கண்டு மகிழ்கிறேன்.
தொடர்ச்சியான
இடைவெளியில்
தோதகத்தி மரத்தை
எட்டிப்பார்க்கிறேன்.
இன்றும் கூட
ஜோடி சிட்டுகள்
வந்துவிடுமென்ற
நம்பிக்கை
சிறகடிக்கிறது.
சிட்டுகள்
வருவதும்
போவதும்
அவற்றின் விருப்பம்
என்னால்
என்ன
செய்துவிட முடியும்.

ப. சுடலைமணி

Series Navigationபையன் தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -8