கவிதை

Spread the love

ஆதியோகி

அனுபவம்
+++++++++
பார்க்கவே கொள்ளை அழகு
அந்த மலர்…!
அருகில் செல்லும்போதே
இதமாய் நாசியுள்
நுழைந்து கிறங்கடிக்கும்
அப்படியொரு நறுமணம் அதனிடத்து…!

பெயர்தான் தெரியவில்லை,
“என்ன மலர்?” என்று
கேட்பவர்களுக்குச் சொல்ல…!

அதனாலென்ன?
ரசித்து, அனுபவித்து
கிறங்கிப் போதலினும்,
பெயர் தெரிதலும்,
பிறருக்கு விளக்கிப்
புரிய வைத்தலுமா முக்கியம்…?
                          – ஆதியோகி

*****

 

Series Navigationவியட்நாம் முத்துகள்மரணித்தும் மறையாத மகாராணி