கவிதை

This entry is part 13 of 23 in the series 14 அக்டோபர் 2012

துர் சொப்பனம்

நிஜத்தில் நிகழாதிருக்க

கிணற்றுக்குள் கல்லைப்போடு.

 

புதிதாய் முளைக்க

விழுந்த பல்லை

கூரையில் விட்டெறி.

 

திடுக்கிட்ட நெஞ்சு

திடமாய் மாற

மூன்று முறை எச்சில் உமிழு.

 

கண்ணேறு மறைய

காலனா சூடத்தை

முற்றத்தில் கொழுத்து.

 

பாதை இருட்டு கடக்க

மூச்சு விடாமல்

இறை நாமம் சொல்லு.

 

தலைமுறை தோறும்

உயிர்த்திருந்த

உபதேசங்கள்…….

 

உதிர்ந்து சருகானது

அடுக்குமாடி

குடியிருப்புகள் வந்தபின்!

 

மு.கோபி சரபோஜி

சிங்கப்பூர்.

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 41) நளினக் குறும்புகள்கிழவனும் கடலும் ஒரு வாசகனின் புரிதலில்

1 Comment

  1. அட்டகாசம் பழைய கழிதலும் புதியன புகுதலும் கேள்வி பட்டிருக்கிறோம்.. சில நம்பிக்கைகளும் கூட மாறிப்போகும் விசயத்தை அழகு கவிதையில் அருமையாய் வரிசைப்படுத்தியுள்ளீர்கள் பாராட்டுக்கள்

Leave a Reply to திருமலைசோமு Cancel reply

Your email address will not be published. Required fields are marked *