கவியின் இருப்பும் இன்மையும்

Spread the love

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

 

சிலர் சதா சர்வகாலமும் SELF PROMOTION

செய்தவாறும்

உரக்க மிக உரக்கக் கத்தி

சரமாரியாக அவரிவரைக்

குத்திக்கிழித்து

தம்மைப் பெருங்கவிஞர்களாகப்

பறையறிவித்த படியும்

பெருநகரப் பெரும்புள்ளிகளின்

தோளோடு தோள்சேர்த்து நின்று

தமக்கான பிராபல்யத்தை நிறுவப் பிரயத்தனப்பட்டுக்கொண்டும்

புதிதாக எதையோ எழுதுவதான

பாவனையில்

அரைத்த மாவையே அரைத்தரைத்து

நிறைவாசகரைத் தம்

குறைக் கவித்துவத்தால்

கதிகலங்கச் செய்துகொண்டிருக்க _

வேறு சிலர் வெகு இயல்பாக

கவிதையின் சாரத்தை நாடித்

துடிப்பாகக் கொண்டு

நிறையவோ கொஞ்சமோ

நல்ல கவிதைகள் எழுதி

யவற்றில் வாழ்வாங்கு வாழ்ந்து

இருந்த சுவடே தெரியாமல்

மறைந்துவிடுகிறார்கள்.

 

Series Navigation‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்ஒரு கதை ஒரு கருத்து – கு.ப.ராவின் கனகாம்பரம்