காக்கைப்பாடினி நாடோடியாய் அலைகிறாள்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தக்கலை கிளையும் நூறுல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்துறையும் இணைந்து ஒருங்கிணைக்கும் கவிதை எழுத்து பயிலரங்கம் ஆகஸ்டு15,16 ஆகிய தேதிகளில் அக்கல்லூரி அரங்கில் நடைபெற உள்ளது.
சங்ககாலகவிதை அகமும் புறமும்,பக்திமரபுஆண்டாள் காரைக்கால் அம்மையாரை முன்வைத்து,அருணகிரிநாதரும் தமிழ் அடையாள உருவாக்கமும்,மறைஞான கவிதைமரபு சித்தர்களும் சூபிகளும் என அமைக்கப்பட்டுள்ளன.
கவிதை நவீனமான கதை அரங்கில் எழுத்துமரபு , வானம்பாடிமரபு, தலித்கவிதை, பெண்கவிதை எழுத்து என்பதான பொருண்மைகளில் ஆய்வுரைகள் வாசிக்கப்படுகின்றன.
முனைவர் பா.ஆனந்தகுமார், முனைவர் ஞா.ஸ்டீபன்,அரவிந்தன் நீலகண்டன்,ஆர்.பிரேம்குமார் கவிஞர் சுகுமாரன் பேரா.நடசிவகுமார்,முனைவர் மெர்சிலதா உள்ளிட்ட பல அறிஞர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
சிந்தனையாளர் சி.சொக்கலிங்கம்,கல்வெட்டியலாளர் செந்தீநடராசன்,வி.சிவராமன்,ஹெச்.ஜிரசூல் முதல்வரும் முனைவருமான வி.உமையொருபாகன்.பேரா.எஸ்.பத்மதேவி நாவலாசிரியர் மீரான்மைதீன், கவிஞர் ஜி.எஸ் தயாளன்,கவி அபிலாஷ்சந்திரன் ஆகியோர் தலைமையேற்றும், ஆய்வுக்கட்டுரைகளுக்கு கருத்துரை யாற்றவும் உள்ளனர்.
நிறைவுவிழாவில் சாகித்திய அகாடமிவிருது பெற்ற நாவலாசிரியர் பொன்னீலன் பல்கலைக்கழக வேந்தர் டக்டர் ஏ.பீ.மஜீத்கான் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந் நிகழ்வில் சமகாலத்தில் வெளிவந்த பனிரெண்டு கவிதைப் பிரதிகளும் விமர்சனங்களும் என்ற அமர்வில் பனிரெண்டு விமர்சகர்கள் கட்டுரை வாசிக்கின்றனர். கவிதையையை மொழிதல் என்றொரு சிறப்பு நிகழ்வும் இதில் இடம்பெறுகிறது. தமிழகத்தில் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கிற பதினைந்து கவிஞர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.அனைத்துக் கல்லூரிமாணவ மாணவியர் கலந்து கொள்ளும் இருநாள் கவிதை பயிலரங்கில் கவிஞர்கள். கவிதை ஆர்வலர்கள் கவிதை விமர்சகர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.
நிகழ்வுகள் இடம்பெறும் அரங்கு
நூறுல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரி
குமாரகோவில்(நாகர்கோவில் – தக்கலை வழி)
கன்னியாகுமரி மாவட்டம்.
தொடர்புக்குரியஎண்கள்
9791954174
9442079252
9443172681

ஹெச்.ஜி.ரசூல்

Series Navigationநினைத்த விதத்தில்எனது இலக்கிய அனுபவங்கள் – 10 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (2. கி.வா.ஜ)