காணாமல் போன கவிதை

 

சாபு சைமன்

ஒரு கவிதைப் புத்தகம்
தொலைந்து போனது.

இருப்புக்கும்
இறப்புக்கும்
இடையேயான இடைவெளி
கொஞ்சம்தான் என்று
மீண்டும் ஒருமுறை
வாழ்க்கையால் எழுதித்
தொலைந்து போனது கவிதை.

 

தான் பிரசவித்த வரிகளுக்கு

விலாசம் கொடுத்துவிட்டு

முகவரி தெரியாத ஊருக்குக்

குடிபெயர்ந்தான் பிரம்மா.

 

கம்பி அறுந்தது யாழ்.
மீட்டிய விரல்கள் நேற்றைய நினைவுகள்.
மீண்டும் ஒருமுறை
வரிகளின் இடையே
பிரம்மாவைத் தேடி
நிஜங்களின் வலிகளோடு
நடந்து நீங்குகிறோம்.

– சாபு சைமன்.

Series Navigationகவிஞன் திரு நா.முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலிகாப்பியக் காட்சிகள் ​16. சிந்தாமணியில் சமுதாய நம்பிக்கைகள்