காணோம்

இரா. ஜெயானந்தன்.

கூரைவேய்ந்த பள்ளியைக் காணோம்
குடுமி வைத்த வாத்தியைக் காணோம்
உயர்ந்து வளர்ந்த மரங்களைக் காணோம்
ஏறி விளையாடிய கிளைகளைக் காணோம்.

ஈமொய்த்த எலந்தை பழங்களைக் காணோம்
தோல் சுருங்கியை பாட்டியைக் காணோம்
டவுசரில் ஒட்டுப்போட்ட சுகுமாரானைக் காணோம்
இங்கு படிந்த ஓட்டைப் பேனாக்களை யும் காணோம்.

கிட்டிபுல் விளையாடிய மைதானத்தைக் காணோம்
கிளிக்கொண்டைப் போட்ட கிரிஜாவைக் காணோம்
தேடி தேடி, ஓடி ஓடி பார்த்தேன்
உன்னையும், என்னையும் காணோம்.

Series Navigationதமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் 70வது சிறப்புப் பட்டிமன்றம் 02 டிசம்பர் 2012 ஞாயிறு மாலை மணி 6.30அக்னிப்பிரவேசம்- 11