காதல் துளி

Spread the love

கரையைத் தொட்டுப்

பின் செல்லும்

அலைகள் எல்லாம்

வேறு வேறு என்றாலும்

அலைகளில் அடர்ந்த

நீர்த்துளிகளுமா வேறு வேறு?

ஓர் அலையில்

ராட்டினமாடிக்கொண்டு

வந்தவை அணிமாறி

அடுத்தத் தொகுப்பில்

அடைந்துகொண்டு

எத்தனை முறை

புரண்டெழுந்தாலும்

கரைக்குத் தெரியும்

எந்தத் துளியின் முத்தம்

தன் மடியில்

குமிழாய்ப் பொரிந்ததென்று !

— ரமணி

Series Navigationஒளி-ஒலி ஊடகங்களும் பெண்முன்னேற்றமும்மறக்க முடியாத மாமனிதர் – டாக்டர் ஜி.ஜெயராமன்