Articles Posted by the Author:

 • குருட்டு ஆசை

  குருட்டு ஆசை

      பார்க்காதே என்கிறாள் கண்டிப்பான குரலில் அம்மா. கண் இருண்டு போய்விடும் எனப் பயம் சொடுக்கும் அதிர்வில் கண்மூடிச் சொல்கிறாள் அக்கா.   மழைகூட இரண்டாம் பட்சமாய்ப் போகச் செய்யும் அந்த மின்சாரப் பாம்பை எப்படித்தான் பார்க்காமல் இருக்கமுடியும்?   இடியின் அபஸ்வர பய லயம் சேர்ந்த ஒளித்தெறிப்பு மனதிற்குள் நிரப்பும் அபூர்வ சங்கீதத்திற்காகவே மழைப்பொழுதுகள் மங்கலாக இருக்கையில் எப்படித் தவிர்ப்பது மின்னல் பார்ப்பதை?   தகதகக்கும் தங்க வாள் வானைத் துண்டாக்கிப் பிரபஞ்ச ரகஸ்யங்களைக் […]


 • ஓவியம் தரித்த உயிர்

  ஓவியம் தரித்த உயிர்

  பாராட்டாகத்தான் உனைப் பட்டாம்பூச்சி என்றேன். தாவும் குணமென்று சொன்னதாய் நீ கோபம் கொண்டிருக்கிறாய். ஒருகால் பெயரை மாற்றி வண்ணத்துப் பூச்சியென்று உனைச் சொல்லியிருந்தால் உன் கோபம் சிவப்பு நிறம் கொண்டிருக்காது ஓவியம் தரித்துக்கொண்ட உயிர் நீ என சந்தோஷமடைந்திருக்கலாம். ஆனால் நீ ஒன்றும் அதைப்போல பூச்சி அல்ல. ஒரு பறவை நீ முட்டை புழு என அதன் பரிணாமம் போலன்றி நீ ஜனித்ததிலிருந்தே வண்ணங்கள் கொண்டிருக்கிறாய். இலை செடி மலர்கள் எனத் தாவரங்களைச் சுற்றியே வாழ்க்கை சுழல்கிறது […]


 • மழைக்குப்பின் பூக்கும் சித்திரம்

  மழைக்குப்பின் பூக்கும் சித்திரம்

    பெய்யெனப் பெய்யும் மழை என்பது போல் சொல்லெனச் சொன்னவுடன் வெடித்து வடிக்க என்னிடம் ஒன்றும் கவிதைக் கற்பு இல்லை. குளிர்ந்து இறங்கும் மேகத்தாரை காற்றுடன் மோகித்துச் சல்லாபிக்கும் ஆனந்தக் கூத்தை ரசிப்பது மட்டுமே மழைத் தருணங்களுக்கு நான் தரும் மரியாதை என்றிருப்பினும் இடியையும் மின்னலையும் போல மழைக் காற்றின் மூர்க்க முயக்கத்தை வியந்து சொல்லும் விந்தையாற்றலும் என்னிடம் இல்லை எனக்குள் எங்கெங்கோ சிதறிக் கிடக்கும் சின்னச்சின்ன வார்த்தைகளை மழை முடிந்து அடங்கின பின்தான் கோர்க்க முடிகிறது […]


 • முதுமையின் காதல்

  முதுமையின் காதல்

  ரமணி எவ்வளவு நாட்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதிக நாட்கள் இல்லை என்வசம். உயிருக்கு வயதில்லை எனினும் வயதான உடலைத்தான் போர்த்திக்கொண்டிருக்கிறது என் உயிர். அது சரி முதுமையின் ஆரம்பம் எந்த வயதில் என்று தீர்மானித்தாகிவிட்டதா? அரசாங்கம் வகுத்த எல்லைகள் தாண்டியும் எல்லைக்கு வெகு உள்ளேயும் பல உடல்களுக்குள் அல்லாடுகிறதே வயோதிகம்! இந்தக் கிழ நாட்களில் இழந்து போனவையும் போய் இழந்தவையும் சேர்த்துக் கொண்டவையும் கொண்டு சேர்த்தவையும் பேசித் தொலைத்தவையும் தொலைத்துப் பேசியவையும் கடந்து போனவையும் போய்க் […]


 • பள்ளியெழுச்சி

  பள்ளியெழுச்சி

    நந்தகோபாலன் மகள் நந்தாவே ! மார்கழி போய் தையும் வந்தாயிற்று ! மூன்று நாட்கள் விடுமுறை முடிந்து திங்களும் விடிந்துவிட்டது ! பள்ளி செல்லவேண்டாமா ? எழுந்திரு ! இந்த அப்பார்ட்மெண்ட் ஒன்றும் நம் அரண்மனையல்ல ! நம் ஃப்ளாட்டோ நடுத்தளத்தில் ஒரு 2 BKH ! உன் அப்பன் எழுமுன் நீ விழிக்காவிட்டால் அவன் இடும் சிங்க நாதம் இந்த அப்பார்ட்மெண்டையே கிடுகிடுக்க வைக்கும் ! இன்னும் அரைமணியில் பள்ளி வண்டியும் வந்துவிடும் ! […]


 • மெய்ப்பொருள்

  மெய்ப்பொருள்

  சத்ய தாரையில் ஒரு துளியாய் தெய்வம் கண்ட தருணம். ஆத்ம அரவத்தின் ஒய்யாரத்தில் கவிதையின் சயனம். கிடந்த பெரிய வீணையிலிருந்து எழுந்த புலப்படாத ராகத்தின் உயரத்தில் லயித்துப் பறக்கிறது மனப்பட்சி! கூப்பிய கைவிரல்களுக்கு இடையில் ஏந்திய மௌனம் துளசியின் ஈரம்பட்டு விழித்துக் கொள்கிறது ! சேவிக்கும் தாமரைக்குள்ளேதான் வாழ்வின் மகரந்தம். சொல்லிக் கொடுத்தவன் அருகில். பிரித்துக்கொடுத்தவன் எதிரில். இருந்தும் புரியாது கல்லாய் நிற்கிறேன் ! கல்லே நாம் ! கல்லே நம் ஆசான் ! கல்லே தெய்வம் […]


 • தலைநகரக் குற்றம்

  தலைநகரக் குற்றம்

  குடியரசு தின அணிவகுப்பின் போது பனிமூட்டத்திற்குக் கட்டுப்பட்ட வாயிலாகக் காட்டப்படும் இந்தியா கேட் கடந்த இரண்டு நாட்களில் வேறு வகையான அணிவகுப்பைக் கண்டது. இளம் இந்தியா கோபக்கனலைக் கக்கிக்கொண்டிருக்க , அரசு இயந்திரமோ தன் பாட்டுக்குத் தடியடியையும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் , தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வித்தையையும் காட்டிக்கொண்டிருக்கிறது. இளைய இந்தியாவின் அரசியல் பிம்பமும் , அன்னை போன்றஅடைமொழிகளில் ஒளிர்ந்து கொண்டிருப்பவர்களும் இருபத்து மூன்று இளம்பெண் வன்கொடுமைக்கு ஆளானதற்கு ஆறுதலுக்குக்கூடத் திருவாய் மலர்ந்தருளவில்லை என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். […]


 • சீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்

  சீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்

  ” இந்தியனாக இரு. இந்தியப்பொருட்களையே வாங்கு ! இந்தியனாக இரு. இந்தியப் பொருட்களையே வாங்கு ! ” ” டேய் யார்றா அது. நேரம் காலம் தெரியாம கூவறது ? ” ” ஏனப்பா ? தேச பக்திச் சாரம் மிக்க வார்த்தைகளைத் தானே சொல்கிறேன் ? தவறென்ன இதில் ? ” ” பார்லிமெண்டே அமளி துமளி படுது ! எதிர்க் கட்சிக்காரவங்க எல்லாம் அன்னிய முதலீடு சில்லறை வணிகத்தில கூடாதுன்னு கத்தறானுங்க . இதுல […]


 • அடங்கி விடுதல்

  அடங்கி விடுதல்

    சில நாட்கள் நமக்கானதே அல்ல என்போதுபோல் ஆகிவிடும். ஒன்றும் சரியாக நடக்காது. எல்லா வேலைகளும் நம் தலையிலேயே விழும்.  நம்மை எல்லோரும் அன்று  நாம் ஒரு தவறும் செய்யாதிருந்தாலும்  திட்டித் தீர்ப்பார்கள்.   அன்று மாட்டுக்கு புல் வாங்கி வரவேண்டியது என்னுடைய முறையே இல்லை. என் தம்பிதான் போகவேண்டும். ஆனால் அவனோ ,  காலையில் எழுந்ததிலிருந்து ரொம்பத்தான் படம் காட்டிக்கொண்டிருந்தான். பல்துலக்கி வாய் கழுவும்போது வேண்டுமென்றே விரல்களைத்  தொண்டைக்குள்விட்டு அடிபட்ட நாய் அழுவதுபோல ஒரு சத்தத்தை […]


 • கடவுள் உண்டு

  கடவுள் உண்டு

  மகேஷின் வாழ்க்கையில் நடந்ததெல்லாம் ஏதோ காலம் தவறாமல் புறப்பட்டுக் காலத்தோடு போய்க்கொண்டிருந்த நிச்சயிக்கப்பட்ட சொகுசு ரயில் பயணம் மாதிரிதான் இருந்தது. ” அவன் பொறந்தப்பறந்தான் அவுங்கப்பாவுக்கு ப்ரோமோஷன் வந்துச்சு. கேசுபோட்டு இளுத்துக்கிட்டிருந்த எங்க பூர்விக சொத்து, பங்காளிங்ககிட்டேந்து எங்களுக்கு வந்துச்சு. எங்கம்மாளுக்கு கவர்மெண்டுல பென்ஷன் கொடுத்தாங்க. இவன் எங்க குடும்ப அதிஷ்டம்ல… ” என்று பதினெட்டு வயசானாலும் மகேஷை உச்சிமோந்து சிலிர்த்துக் கொள்வாள் அவன் அம்மா. ரயில்வே ஒர்க் ஷாப்பின் கிழக்கு வாசலிலிருந்து நேராக வரும் சாலை […]