காரணமில்லா கடிவாளங்கள்

பெரு வட்டம்
அதனுள் சிறுவட்டம்
மீண்டும் உள்வட்டம்
கருவட்டம் மையபுள்ளியாய்
குறிபலகை ஒன்று..

மைதானத்தில் எவனோ நட்டுவிட்டான்
வருவோர் போவோர் எல்லாம்
மையத்தை நோக்கி எய்த
ஆரம்பித்து விட்டனர் அம்பை..

பலகை வரை கூட செல்லாத ,
பெருவட்ட வளைவில் செருகிய ,
வட்டத்தை தொட்டு கவிழ்ந்த .- என
சிதறியது பலதரப்பட்ட அம்புகள்
தோல்வியென சுருங்கியது மனங்கள்

குறிபலகை இருக்கிறது என்பதற்காக
குறி எய்த வேண்டுமென
எவர் சொன்னது ?

கல்யாணம், குழந்தை, குட்டி
சம்பாத்யம்,பணம்,காசு
இதுதான் வாழ்க்கை என்றும்
எவர் சொன்னது ?

-சித்ரா (k_chithra@yahoo.com)

Series Navigationஅதுவும் அவையும்!நாடகம் நிகழ்வு அழகியல். ஒரு பார்வை.