காரைக்குடி கம்பன் கழகத்தின் நவம்பர் மாதக்கூட்டம்

இரண்டாம் சனிக்கிழமையான 09-11-2013 அன்று நடைபெற உள்ளது. முதல் சனிக்கிழமையாகிய 2-11-2013 அன்று தீபாவளித்திருநாள் என்பதால் இம்மாதம் மட்டும் இரண்டாம் சனிக்கிழமை நடைபெறுகின்றது.

 

நிகழ்நிரல்

6.00 மணி – இறைவணக்கம்

6.03 மணி –வரவேற்புரை

6.10 மணி- கம்பன் ஓர் இலக்கணப் பார்வை

திருச்சிராப்பள்ளி தூயவளானர் தன்னாட்சிக் கல்லூரித் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர் இ. சூசை

7.25 மணி- சுவைஞர்கள் கலந்துரையாடல்

7.55- நன்றியுரை

8.00 மணி- சிற்றுண்டி

கம்பன் புகழ் பருகிக் கன்னத்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக!

அன்பும் பணிவுமுள்ள

கம்பன் கழகத்தார்.

நிகழ்ச்சி உதவி

பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ், திருமிகு, அரு.வே .மாணிக்கவேலு- சரஸ்வதி குடும்பத்தாருக்குப் பல்லாண்டு! பல்லாண்டு

காரைக்குடி கம்பன் கழகத்தின் நவம்பர் மாதக்கூட்டம்

Series Navigationநீங்காத நினைவுகள் – 21வாழ்க்கைத்தரம்

Leave a Reply

*

காரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி

சேதுபதி சேதுகபிலன்
காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பாக சென்ற ஆண்டு முதல் மாதக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாதக் கூட்டங்களில் கம்பன் பற்றிய ஆய்வுரைகள் பல அறிஞர்களால் வழங்கப் பெற்று வருகின்றன.
மாதக் கூட்டம் ஆரம்பிக்கப் பெற்று ஓராண்டு நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் அறக்கட்டளை ஒன்று நிறுவப்படுகிறது. சென்னை நந்தனம்கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் ந. சேஷாத்திரி அவர்கள் தன் தாயார் ஸ்ரீ பெரும் புதூர் கோ. வேதவல்லி அவர்கள் நினைவாக இந்த அறக்கட்டளையை நிறுவியுள்ளார்.
இதுவரை கம்பன் ஆய்வு நிகழாத துறையில் சிறந்த அறிஞரைக் கொண்டு செய்யப்படும் இப்பொழிவு நூலகவும் அன்றே வெளிவருகிறது. வரும் ஜூன் மாதம் 4 ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு முனைவர் சொ. சேதுபதி அவர்கள் கம்பனைச் சுற்றுச் சூழல் நோக்கில் ஆராய்ந்து கம்பன் காக்கும் உலகு என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். அந்த உரை நூல் வடிவில் அன்றே வெளியிடப் படுகிறது. சென்னை பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியிடும் கம்பன் காக்கும் உலகு என்ற ஆய்வு நூலை வெளியிட்டு இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்  பேசுகிறார். ஆழ்வார் அடியார் பரகாலன் தலைமை ஏற்க கம்பன் அடிசூடி வரவேற்று விழாவை நெறிப்படுத்துகிறார்.. பலர் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்காரைக்குடி கம்பன் மணிமண்டப அரங்கில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு வருகை தர வேண்டுகிறோம்.அழைப்பு இத்துடன் இணைக்கப்பெற்றுளது.

Series Navigationஉறையூர் தேவதைகள்.குழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம்! (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)

Leave a Reply

*