காற்றும் நானும்

Spread the love

ஆழ்ந்த உறக்கத்தினிடையே
அடித்த காற்றில்
வெளியே பறந்த
தெருத்தூசுகளோடு
அடித்து கொண்டிருந்த
சன்னல் கதவின்
அகண்ட வெளிகளோடு
தொலைந்து போயிற்று
தூக்கமும்.

விழிகளை அடைத்து
இருண்ட வெளியில்
புரண்டு புரண்டு
காற்றோடு மிதந்து
போன தூக்கத்தை
இமைகளின் முடிகளால்
கட்டி இழுக்க எத்தனித்தேன்…
என்னையே இழுக்கிற
காற்றில் எதுவுமே
நடக்கவில்லை.

சுழலும் காற்று
சூழ்ந்த இரவில் பற்பல
பகற் கனவுகளோடு
புரளும் நான்…

குமரி எஸ். நீலகண்டன்

Series Navigationஜே. ஜே சில குறிப்புகள் – ஒரு வாசக அனுபவம்ஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..