காலம் மகிழ்கிறது !

Spread the love

     

                     

அந்த இடைவெளியின்

இக்கரையிலும்

அக்கரையிலும்

ஆசைகள்

குவியல் குவியலாய் …

அந்த ஆசைகளின் சஞ்சாரம்

மனவெளியில் 

நிரந்தரமாகக்

கால்பாவ இயலாமல்

துவண்டு விழுகிறது

ஆயிரமாயிரம்

மனமாளிகைகள்

கட்டப்படும் போதே

இடிந்து விழுகின்றன

ஒவ்வொரு மலரிலும்

அவள் முகத்தைப்

பொருத்திப் பார்த்து

புளகாங்கிதம்

அடைகிறான் அவன் 

எல்லா பாடல்களிலும்

சோகராகம் இழைவதைக்

கேட்கிறாள் அவள் 

—- அவர்கள் பாதையில்

கூரிய முட்களைப் பரப்பி

மகிழ்கிறது காலம் !

                +++++++++++

     

Series Navigationமாப்பிள்ளை தாலி கட்ட மாட்டார்! —-சிறுகதை ஆர் சூடாமணிமற்றொரு தாயின் மகன்