காலவெளி ஒரு நூலகம்

Spread the love

சி. ஜெயபாரதன், கனடா

வானகம் எனக்கும் போதி மரம்
வைர முத்துவின் ஞான ரதம்
வையகம் மக்கள் ஆதி வரம்
வள்ளுவம் நமக்கு வாழ்வு அறம்.

காலவெளி எனக்கும் ஓர் நூலகம்
கடவுள் படைப்பி லக்கண நாடகம்
ஐன்ஸ்டீன் காணும் இறைப் பீடகம்
அகரத்தில் தொடரும் இயற்கை ஏடகம்.

கல்வி எனக்கு முதற்படி
காசினி அனுபவம் மேற்படி
கற்பது முதுமையில் கைத்தடி
நிற்பது வள்ளுவர் சொற்படி.

காலம் எனக்குத் திசைகாட்டி
காவியம் எனக்கோர் வழிகாட்டி
ஞாலம் நமக்கோர் ஆலயம்
ஞானம் எனக்கோர் ஆயுதம்.

==============

Series Navigationஜெயந்தி ஜெகதீஷ்ஷின் ‘ரெஜித்தர் ஆபிஸ் மசிக் குண்டு’மாம்சம் – தரை –மார்புத்துணி