கிணற்றுத்தவளையாக இருக்காதே – அறிஞர் ந சி கந்தையா பிள்ளை

Spread the love

   
ந சி கந்தையா பிள்ளை.. இவர் தமிழ் அறிவியக்கத்தின் தலைமகன்களில் ஒருவர் . மொழியியல் , சமூகம் , அறிவியல் என பல்துறை ஞானம் மிக்கவர். அனைத்துறைகள் குறித்தும் நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்
 ந.சி.கந்தையா பிள்ளைதமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படும் அளவு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்வதாக” பேராசிரியர் கா.சிவத்தம்பி  குறிப்பிட்டுள்ளார்.. தான் பிறந்து வாழ்ந்து மறைந்த தேசத்தை விட பிற இடங்களில் புகழ் வாழ்வு வாழ்வது பெருமைதான் என்றாலும் , எல்லைகளுக்கு அப்பாற்பட்டு போற்றப்படவேண்டிய்வர் இவர்

ஆரியத்தால் திராவிடத்துக்கு கேடு விளைந்தது என்ற கருத்துடையவ்ர் இவர். இந்த கருத்து தவறு என நினைப்பவர்களும்கூட ரசித்துப்படிக்கும் அளவுக்கு , சித்தாங்களுக்கு அப்பாற்பட்ட பொதுவான நூல்களையும் எழுதிய்வர் இவர் என்பது இவர் தனிச்சிறப்பு. ஒரு பலகலைக்கழகம் செய்ய வேண்டிய வேலையை தனி ஆளாக செய்தவர் இவர் 
இலக்கியம் , மொழி , சமயம் என பல்துறைகளில் இவர் எழுதி இருந்தாலும் , இவரது அறிவியல் பார்வையை மட்டும் இக்கட்டுரையில் பார்க்க இருக்கிறோம். தமிழில் அறிவியல் படிப்பது தனி இன்பம், அறிவியலுக்கு ஏற்ற மொழி தமிழ் என்பதை அவர் எழுத்தைப் படிக்கையில் உணரலாம்
அவரது படைப்புகள் பின் வருமாறு..

த்மிழ்மொழி , தமிழர் வரலாறு , தமிழர் நாகரிகம் ,     தமிழகம் , தமிழ் இந்தியா , திராவிட நாகரிகம் , சிவவழிபாடு , முச்சங்கங்கள், சிந்துவெளிநாகரிகம் , தமிழர் ஆரியர் கலப்பு , பத்துப்பாட்டு ,  பதிற்றுப்பத்து.  கலித்தொகை ,  பரிபாடல் , அகநானூறு ,புறப்பொருள் விளக்கம்
கலிங்கத்துப் பரணி ,விறலிவிடுதூது, பெண்கள் உலகம். பெண்கள் சமூகம் அன்றும் இன்றும் ,பெண்கள் புரட்சி , பொது அறிவு, பொது அறிவு வினா விடை ,உலக அறிவியல் நூல் ,உங்களுக்குத் தெரியுமா ,அறிவுக் கட்டுரைகள்நூலகங்கள்அறிவு மாலைஅறிவுரைக் கோவைதமிழர் சமயம் எது?
சைவ சமய வரலாறு  சிவன்   இந்து சமய வரலாறு   தமிழர் பண்பாடு  நமது தாய்மொழி  நமது மொழி நமது நாடுதிராவிட மொழிகளும் இந்தியும்
தமிழ்ப் பழமையும் புதுமையும்    முச்சங்கம்  தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா?   ஆரியத்தால் விளைந்த கேடு    புரோகிதர் ஆட்சி
இராமாயணம் நடந்த கதையா?   ஆரியர் வேதங்கள்   திராவிடம் என்றால் என்ன?    திராவிட இந்தியா    மறைந்த நாகரிகம் ஆதி மனிதன்
ஆதி உயிர்கள்  மனிதன் எப்படித் தோன்றினான்?     மரணத்தின் பின்    பாம்பு வணக்கம்   தமிழர் யார்? உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு
சிந்துவெளித் தமிழர்   தென்னிந்நியக் குலங்களும் குடிகளும்    தமிழர் சரித்திரம்   வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தமிழர் திருவள்ளுவர்
திருக்குறள்  தமிழகம்    தமிழ் இந்தியா   திருக்குறள் அகராதி தமிழ்ப் புலவர் அகராதி     தமிழ் இலக்கிய அகராதி    காலக்குறிப்பு அகராதி
செந்தமிழ் அகராதி   கலிவர் யாத்திரை   இராபின்சன் குரூசோ   அகத்தியர்    தமிழ் ஆராய்ச்சி   தமிழ் விளக்கம்நீதிநெறி விளக்கம்

இப்படி ஏராளமாக எழுதி இருக்கிறார். இவை தொகுப்பட்டு ம்  ந சி க நூல் நூல் திரட்டு என்ற பெயுரில் பல பகுதிகளாக அழகாக வெளிவந்துள்ளன
இந்த நூல் திரட்டு வரிசையில் ஆறாவாது நூலில் பெயர் – உங்களுக்கு தெரியுமா ?  உலக அறிவியல் நூல் , உங்களுக்குத் தெரியுமா , பொது அறிவு , பொது அறிவு வினா- விடை  ஆகிய நூல்களின் தொகுப்புதான்  “ உங்களுக்குத் தெரியுமா ; என்ற இந்த நூல்
 உலக அறிவியல் நூல் என்ற பகுதி ஓர் அழகான கலைக்களஞ்சியம் போல இருக்கிறது
இரவில் வெயில் அடிக்கும் தேசம் , உலகின் நீளமான ஆறுகள் , மின்னல் , பூனை இரவில் பார்க்கும் போன்ற தலைப்புகளில் சுவையான தகவல்கள்
அண்ணாவி போன்ற சொற்களின் பயன்பாடு ஆச்சர்யம் அளிக்கிறது
கண்ணன் என்பது தமிழர் கடவுள் , வீரசைவம் என்பது பிராமண மதத்துக்கு எதிராக தோன்றிய சமயம் , சில வகை நண்டுகள் கல்லாக மாறுகின்றன , பேச்சு வழக்கில் வேலை வெட்டி இல்லையா என்கிறோம் , இதில் வெட்டி என்பதன் பொருள் என்ன என்ற வரலாற்றுப்பின்னணியிலான் விளக்கம் , சிங்களவர்களுள் காணப்படும் உரோடியர் எனும் பிரிவினர் , இரவு பகல் சமமாக இருக்கும் நாட்கள்  செல்வர்கள்ப்போல ஏழைகள் அணியக்கூடாது என இருந்த சட்டம் என பல்வேறு விஷ்யங்கள் குறித்து சுவைபட எழுதி இருக்கிறார்
ஐதீகங்கள் , நம்பிக்கைகள்  , சமூக நீதி ஆகியவற்றையும் அறிவியலுடன் கலந்து எழுதி இருப்பது ஒரு வித்தியாசமான சுவையை தருகிறது
உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதி உலக தரம் ..
கேள்வி பதில் பாணியில் கடினமான விஷ்யங்களை எளிதாக விளக்கும் நூல்கள் ஆங்கிலத்தில் ஏராளம் உண்டு. சிறுவர்களுக்கு மட்டும் அல்ல , பெரியவர்களும் படிக்கத்தக்க வகையில் அவை இருக்கும்.. 
அந்த நூல்கள் போல அழகுத்தமிழில் பல்வேறு தலைப்புகளின் கீழ் பல தகவல்கள் சுவையாக பரிமாறப்பட்டுள்ளன
எரிகற்கள் என்றால் என்ன , நிலவில் காணப்படும் கறைக்கு காரணம் என்ன …சூரியன் எதனால் ஆனது   .. ஒரு ரயில் தன் இயல்பான வேகத்தில் சென்றால் ஒரு நட்சட்த்திரத்தை அடைய எவ்வளவு காலம் ஆகும் ( விடை 25,500 , 000,000,000 ஆண்டுகள் ) .. ஓர் ஆண்டின் நீண்ட பகல் , குறுகிய பகல் என்று வரும் .. ஈ எப்படி நடக்கிறது…  உணவின்றி வாழும் உயிரிகள் .. வான்கோழியின் பூர்வீகம்..  யானைக்கும் தும்பிக்கை இருப்பதுபோல ஈக்கும் இருக்கிறதா என்பது போல பல தகவல்கள்    பதில்கள் முக்கியமில்லை..  இந்த பதில்களை இன்று இணையத்தில்கூட தேடி எடுக்கலாம்
  ஆனால் நம்மைச்சுற்றி இருக்கும் பல சுவாரஸ்யங்களை கவனப்படுத்துவது இந்த நூலின் சிறப்பம்சம் ஆகும்
 ஹார்ஸ் பவர் என்பதற்கு குதிரை பலம் என்ற மொழியாக்கம் அழகு
33,000 இறாத்தல் பாரத்தை ஒரு நிமிடத்தில் ஓர் அடி உயர்த்தக்கூடிய ஆற்றல்தான் ஒரு குதிரை பல, என்ற வரையறை தமிழில் எதையும் அழகுபட சொல்ல முடியும் என உணர்த்துகிறது
ஆங்கிலம் வளர்வதற்கு காரணம் அது பல மொழிகளின் சொற்களை தயக்கமின்றி ஏற்பதுதான்
நாமும் அப்படி செய்ய வேண்டும் என்றுதான் திசைச்சொல் என்ற வசதியை நம் முன்னோர்கள் அனுமதித்தனர்.
ஆனால் தனித்தமிழ் என சிலர் பிடிவாதம் காட்டுவதால் , பண்டிதத்தமிழ் என்பது சராசரி மக்களை எட்டுவதில்லை
ஷேவ் பண்ணிட்டு , பாத் பண்ணிட்டு , பிரேக் ஃபாஸ்ட் பண்ணிட்டு , கார் டிரைவ் பண்ணி , ஆஃபிஸ் போயி , வொர்க் பண்ணினேன் என்றொரு பண்ணித்தமிழ் பயன்பாட்டில் இருக்கிறது
அன்னிய மொழிச் சொற்கள் பயன்பாடு தவிர்க்க முடியாது என்பதை ஏற்று , அதை நெறிப்படித்தி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால்தான் பண்ணித்தமிழை ஒழிக்க முடியும் . 
 அறிஞர் ந சி க , அழ்கு தமிழில் அழ்கு தமிழ் சொற்களில் எழுதினாலும் திசைச்சொற்களையும் தேவைக்கேற்ப பயன்படுத்துகிறார்
உலோகவியலில் temper என்ற வார்த்தைக்கு தோய்தல் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். 
பொது அறிவு என்பது விசாலமான பொருளைக்கொண்டது இந்த தலைப்பின்கீழ் என்ன வேண்டுமென்றாலும் எழுதலாம். 
எவற்றை தேர்ந்து எடுக்கிறோம் என்பதில்தான் அதை எழுதுபவரின் ஆளுமை தெரியும்.. 
 ந சி கந்தையா பிள்ளை பல்துறை அறிஞர் என்பதால் எல்லா துறைகளிலும் இருந்து தகவல்களை தருகிறார்
எனவே சும்மா பொழுது போக்குக்காக படித்தாலும் சுவையாகவே இருக்கிறது
உயிரைக்காக்கும் உலோகம் , மீனுக்கு பயிற்சி அளித்து வேட்டைக்கு பயன்படுத்தலாமா , உருளைகிழங்கு அசைவை உணவு காம்பினேஷன் ஏன் விரும்பத்தக்கது , குளிர் மற்றும் வெப்ப ரத்த உயிர்கள் என பலதரப்பட்ட சுவையான தகவல்கள்
உலக் அறிவு இல்லாவிட்டால்  நம்மை கிணற்றுத் தவளைகள் என பிறர் நினைப்பார்கள்..
அதனால் பொது அறிவு முக்கியம் என முன்னுரையில் குறிப்பிடுகிறார்
இணைய யுகத்தில் தகவல்களை எளிதாக பெற முடியும் என்றாலும் அதற்கானே தேடலை நாம்தான் முன்னெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் , வாழ்க ஒழிக அரசியலுக்குத்தான் இணையத்தையும் பயன்படுத்துவோம்.

பழ்ந்தமிழ் இலக்கியத்தில் இருக்கும் ஆர்வம் அறிவியலிலும் இருக்க வேண்டும் ,. ஆன்மிகத்திலும் இருக்க வேண்டும். அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை அல்ல என உணர்ந்த ந சி க வின் எழுத்துகள் மீள் வாசிப்பு செய்யப்பட வேண்டும் . விவாதிக்கப்பட வேண்டும்

Series Navigationசரியாத் தமிழ் எழுதுறவங்க யாருமில்ல…தவம்