author

கிரிக்கெட் வீரன் மரணமும் , மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்த எழுத்தாளர்களும்

This entry is part 1 of 14 in the series 28 ஜூன் 2020

   கிரிக்கெட் வீரர் ரஜிந்தர் கோயல் இம்மாதம் காலமானார். இந்த செய்தி இலக்கியம் , சமூகம் என பல விஷயங்கள் குறித்தும் யோசிக்க வைத்தது.. ஏன் ? பார்க்கலாம்.    இவர் டெல்லி மற்றும் ஹரியானா அணிகளுக்காக விளையாடியவர்.  மிகச்சிறந்த சுழற் பந்து வீச்சாளர். ரஞ்சிப்போட்டிகளில் அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்த சாதனை இவர் வசமே உள்ளது கவாஸ்கர் தன் நூலில் தன்னை கவர்ந்த வீரர்கள் வரிசையில் இவரை சிறப்பாக குறிப்பிட்டுள்ளார் கிரிக்கெட் உலகம் கண்ட சிறந்த வீரர்களில் இவரும் ஒருவர் என் பிஷன் சிங் பேடி […]

கிணற்றுத்தவளையாக இருக்காதே – அறிஞர் ந சி கந்தையா பிள்ளை

This entry is part 6 of 18 in the series 21 ஜூன் 2020

    ந சி கந்தையா பிள்ளை.. இவர் தமிழ் அறிவியக்கத்தின் தலைமகன்களில் ஒருவர் . மொழியியல் , சமூகம் , அறிவியல் என பல்துறை ஞானம் மிக்கவர். அனைத்துறைகள் குறித்தும் நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார் ந.சி.கந்தையா பிள்ளைதமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படும் அளவு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்வதாக” பேராசிரியர் கா.சிவத்தம்பி  குறிப்பிட்டுள்ளார்.. தான் பிறந்து வாழ்ந்து மறைந்த தேசத்தை விட பிற இடங்களில் புகழ் வாழ்வு வாழ்வது பெருமைதான் என்றாலும் , […]

காலப்பயணமும் , காலமென்னும் புதிரும்

This entry is part 2 of 9 in the series 7 ஜூன் 2020

காலப்பயணம் சாத்தியமா என்பதுமனிதனின் விடைகிடைக்காத கேள்விகளுள் ஒன்றுஒளியின் வேகத்தை அடைந்தால் காலம் நின்று விடுகிறது என்கிறது அறிவியல். அதாவது ஒளியின் வேகத்தில் சற்று நேரம் பயணித்துவரலாம் என நினைத்து விண்கலத்தில் கிளம்புகிறீர்கள்.   சரி போதும் என நினைத்து புறப்ப்பட்ட இடத்திற்கு வந்து பார்த்தால் அதிர்ச்சி.  உங்கள் கடிகாரத்தில் அரைமணி நேரம்தான் கடந்துள்ளது.  நீங்கள் புறப்பட்ட இடத்திலோ ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. கலாச்சாரம் , தேச எல்லைகள் என எல்லாம் மாறிவிட்டனஆக , காலம் என்பது நெகிழ்வுத்தன்மை […]

ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை

This entry is part 5 of 9 in the series 31 மே 2020

எனக்கும் தமிழ்தான் மூச்சுஆனால் அதை நான் பிறர் மேல் விட மாட்டேன்எல்லா மொழியும் நன்றுகோபிக்காதீர் நண்பரேஅவற்றுள் தமிழும் ஒன்றுஎன ஞானக்கூத்தன் எழுதியிருப்பார்ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதற்காக பிறமொழி காழ்ப்பை பிரபலமாக்கிய அரசியல்வாதிகளால் , தமிழுக்கும் பிறமொழிகளுக்கும் உரையாடல் நிகழ்வது நின்று விட்டது. தமிழ் தமிழ்நாட்டில் மட்டுமே புழங்கும்மொழியாகி , கொஞ்சம்கொஞ்சமாக வெறும்பேச்சு மொழியாக மாறி வருகிறது.  தமிழ் பத்திரிக்கைகள் அழிந்து வருகின்றன.  தமிழ் வாசிக்கத் தெரியாத தலைமுறை உருவாகி வருகிறது  பன்மொழிப்புலவர் மு.ஜகந்நாதராஜா மொழி பெயர்த்த நாகானந்தம் […]

ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவை

This entry is part 5 of 12 in the series 24 மே 2020

 முகநூல் எழுத்து என்பது அழகான கனவு.  அந்த கனவு கலையும் தருணம் அதைவிட அழகு.   ஒரு முகநூல் எழுத்தாளர். அவருக்கு ஏராளமான நண்பர்கள். ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் லைக்குகள் குவியும் . பலர் அதை பகிர்வார்கள்.  பாராட்டி பலர் பின்னூட்டம் போடுவார்கள்  . ஒருமுறை தனது,நூல் வெளியீட்டு விழாவுக்கு தன் ரசிகர்களை அழைத்தார். சூப்பர் தல,  சுற்றம்சூழ வந்து விடுகிறோம் என பலர் பின்னூட்டம் போட்டார்கள்.  லைக்குகள் குவிந்தனகடைசியில் பார்த்தால் விழாவுக்கு வந்தவர்கள் இரண்டு பேர்தான். இருவரும் அவருக்கு […]

ஜெயலலிதா எதை தேர்ந்தெடுக்கப்போகிறார் ?

This entry is part 21 of 41 in the series 13 நவம்பர் 2011

சந்திரபாபு நாயுடு முதல்வர்களுக்கெல்லாம் ரோல் மாடல் என பத்திரிக்கைகள் பாராட்டின. ஹைதராபாத்தை சைபராபாத் ( cyberabad ) ஆக, கணினி மயமாக்கி ஆந்திராவை வளர்த்து விட்ட்தாக அறிவு ஜீவிகள் பாராட்டினார்கள்.  நான் முதல்வர் அல்லன். முதன்மை செயல் அலுவலன் என கார்ப்பரேட் அதிகாரி போல அவர் பேட்டி கொடுத்தார். அவர் முதல்வராக இருந்த்து போதும். பிரதமராக வேண்டும் என அறிவு ஜீவுகள் கெஞ்சினார்கள். ஆனால் தேர்தல் வந்தபோது , தோல்வி அடைந்து வெளியேறிய அவர் , இன்று […]