கிணற்று நிலா

குமரி எஸ். நீலகண்டன்

கிணற்றுக்குள் விழுந்து
விட்டது நிலா.
வாளியை இறக்கி
நிலாவைத்
தூக்க முயல்கையில்
வாளித் தண்ணீரில்
வரும் நிலா
மீண்டும் கிணற்றுக்குள்ளேயே
விழுந்தது.

அசையும் கயிறுக்கு அஞ்சி
ஆழ் கிணற்றினுள்ளேயே
துள்ளி விழுகிறது
என்றான் நண்பன்.

இல்லை..
வாளி சிறிய
குளமென்று
வர மறுத்து
பிடிவாதமாய்
அதைவிடப்
பெரிய குளமென
மீண்டும் கிணற்றிலேயே
விழுந்து விடுகிறது
என்றேன் நான்.

குமரி எஸ். நீலகண்டன்
பழைய எண்-204, புதிய எண் – 432.
D7, பார்சன் குரு பிரசாத் ரெசிடென்ஷியல் காம்பிளக்ஸ்,
ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
அலைபேசி – 9444628536

Series NavigationPainting & Sculpture Exhibition to be held on November 20 at Cholamandal Artist Villageஒரு வித்தியாசமான குரல்