”குகைமனிதர்”களது உணவுப்பழக்கம் என்று பிரபலப்படுத்தப்படும் பேலியோ உணவு பழக்கம் ஆபத்தானது என்று உடல்நல நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

author
0 minutes, 8 seconds Read
This entry is part 10 of 12 in the series 10 செப்டம்பர் 2017

By NATALIE KEEGAN
நாட்டலி கீகன்

21st February 2016

எடை குறைக்கவும், உடல் பலம் ஏற்றவும் விரும்பும் பலர் இந்த பேலியோ டயட்டை வெகுவாக புகழ்கிறார்கள்

ஆனால், இந்த பேலியோ டயட் (குகை மனிதனின் உணவுப்பழக்கம் என்றும் கூறப்படும்) இந்த டயட் உண்மையிலேயே நல்லதை விட தீயதையே விளைவிக்கிறது.
இது புராதனமான குகை வாழ் மனிதர்கள், வேட்டையாடியும் பொறுக்கியும் உண்ணும் மூதாதையர்கள் எப்படி உண்டார்களோ அதே உணவை மீண்டும் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இதில் அதிகமான கொழுப்பு, மிகக்குறைவான கார்போஹைட்ரேட், புல் கொடுத்து வளர்க்கப்பட்ட ஆடு மாடுகளின் மாமிசம், மீன், பழம் காய்கறிகள் நிறைய முட்டைகள், விதை கொட்டைகள் ஆகியவையும் சேர்த்து இந்த டயட்
உருவாக்கபப்ட்டுள்ளது.
பால், தான்யவகைகள், உருளைக்கிழங்கு, சுத்திகரிக்கப்பட்ட உணவு, உப்பு, சர்க்கரை ஆகியவை முழுக்க நீக்கப்படுகின்றன.
இது முதன்முதலில் கொலராடோ ஸ்டேட் யூனிவர்சிட்டி, உடல்நல பேராசிரியர் லோரன் கோர்டெய்ன் என்பவரால் 2001இல் பிரசுரிக்கப்பட்டது. இது அன்றிலிருந்து மிகவும் பிரபலமாகிவருகிறது.
ஆனாலும் உடல்நல நிபுணர்கள் எட்டு வாரத்திலேயே இந்த டயட்டால், பல உடல்நல பிரச்னைகள் தோன்றும் என்று எச்சரிக்கிறார்கள்.
மெல்போர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், இந்த டயட்டால் எந்த விதமான பயனும் இல்லை என்றும், இதன் பின்னே எந்த விதமான அறிவியற்பூர்வமான ஆதாரமும் இல்லை என்று எச்சரிக்கை செய்ய
முடிவெடுத்தார்கள்.

இந்த ஆய்வின் முக்கிய ஆராய்ச்சியாளரான துணை பேராசிரியர் சோஃப் ஆண்டிரிகோபோவ்லோஸ், நீரிழிவு நோய், அல்லது ஆரம்பகால நீரிழிவு நோய் கொண்டவர்களுக்கு இந்த குறைந்த கார்போ ஹைட்ரேட், அதிக கொழுப்பு பேலியோ டயட்
மிகவும் ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ளார்.

sofandrikopoulos_001Professor Andrikopoulos, who is President of the Australian Diabetes Society.
இந்த மாதிரி டயபடிஸ் உள்ளவர்கள் இந்த டயட்டை எடுத்தால் அவர்கள் எடைதான் அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறார்.
இந்த மாதிரி பேஷனில் வரும் டயட்டுகளில் சற்று எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று கூறுகிறார். எந்த டயட் எடுத்தாலும் தகுதி நிறைந்த மருத்துவர்களின் ஆலோசனையின் படி எடுப்பதே உகந்தது என்று எச்சரிக்கிறார்.

இந்த ஆய்வுக்காக ஆரம்ப டயபடிஸ் உள்ள அதிக எடையுள்ள (குண்டான) பரிசோதனை எலிகளை இரண்டாக பிரித்து ஒரு பிரிவுக்கு இந்த பேலியோ டயட்டையும் மற்றொரு பிரிவுக்கு சாதாரண உணவையும் அளித்தார்கள்.

எட்டு வாரங்களில் பேலியோ டயட்டில் இருந்த எலிகளின் எடை அதிகரித்தது. அவர்களின் குளூகோஸ் சகிப்புத்தன்மை மோசமானது. அவைகளின் இன்சுலின் தேவை அதிகரித்தது.

பேலியோ டயட்டில் இருந்த எலிகளின் எடை 15 சதவீதம் அதிகரித்தது. அவைகளின் உடலில் இருந்த கொழுப்பு சதவீதம் இரண்டு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக அதிகரித்தது.
இதனை ஒரு 100 கிலோ எடையுள்ள ஆளோடு ஒப்பிட்டால் 15 கிலோ எடை ஏறுவதற்கு சமம். இது 2 மாதத்தில். இது மிக அதிகமான எடை அதிகரிப்பு” என்று பேராசிரியர் குறிப்பிட்டார்.

இவ்வாறு எடை அதிகரிப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இது மன அழுத்தத்தையும் எலும்பு சம்பந்தமான பிரச்னைகளையும் ஆர்த்ரிடிஸ் என்னும் மூட்டு பிரச்னைகளையும் தோற்றுவிக்கும் என்றார்.

இந்த மாதிரி அதிக கொழுப்பு சாப்பிடுவது டயபடிஸ் உள்ளவர்களுக்கு இன்னும் உடல் சர்க்கரையை அதிகரித்து இன்சுலின் தேவையை அதிகரித்து அவர்களை இன்னும் டயபடிஸ் மோசத்துக்கு தள்ளிவிடும் என்றார்.

மிக அதிகமாக கொழுப்பு சாப்பிடுவது பிரச்னைகளை அதிகரிக்கும் என்றார்.

மத்திய தரைக்கடல் வழி உணவு டயபடிஸுக்கு மிகவும் நல்லது என்று பேராசிரியர் குறிப்பிட்டார்.

இந்த மத்திய தரைக்கடல் வழி உணவு பருப்பு வகைகள், மீன், காய்கறிகள் குறைந்த சர்க்கரை, ஆலிவ் ஆயில் போன்ற ஆரோக்கியமான எண்ணெய்களை உண்பது டயபடிஸுக்கு நல்லது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்றார்.

The study was published in the Nature journal Nutrition and Diabetes.
sunnews

Series Navigationஅவுஸ்திரேலியா – மெல்பனில் நூல் வெளியீடும் ஆவணப்படம் திரையிடலும்அவள் ஒரு பெண்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *